சிவாஜி என்ற படத்தில் ரஜினி நடிக்கிறார் என்பது சன் டி.வி.க்குத் தலைப்புச் செய்தி. தினத்தந்தியில் தினம் ஒரு சிவாஜி தகவல் இடம்பெறாமல் இருந்ததில்லை. நாளிதழ்கள், வார இதழ்கள், புலனாய்வு இதழ்கள் என எதைப் புரட்டினாலும் சிவாஜி பற்றி ஆதரவாகவோ எதிராகவோ எழுதப்படும் செய்திகளுக்குத் தனி இடம் தரப்பட்டிருக்கும் (தாகம் உள்பட)
படம் பற்றிய அறிவிப்பு வெளியான சில நாட்களில் தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணன் அதிமுக்கியமான செய்தி ஒன்றை வெளியிட்டார்.


‘சிவாஜி என்ற தலைப்பை வைப்பதற்காக நடிகர் திலகம் சிவாஜி குடும்பத்தாரிடம் அனுமதி கேட்டோம். அவர்களும் பெருந்தன்மையுடன் ஒப்புதல் அளித்துவிட்டார்கள். அந்தப் பெயரையே டைட்டிலாக வைத்துப் படம் எடுக்கிறோம்" என்பதுதான் தயாரிப்பாளர் தந்த தகவல். அட.. ஙொக்கமக்கா! இதுதாம்ப்பு பில்டப்புக்குப் பிள்ளையார் சுழி.

சிவாஜி என்று பெயர் வைத்ததால் நடிகர் திலகம் சிவாஜி குடும்பத்தின் அனுமதியை வாங்கினார்களாம். ரஜினி ஏற்கனவே பாட்சா என்ற படத்தில் நடித்திருக்கிறார். அதற்காக அல்-உமா பாட்சாவிடம் அனுமதி வாங்கினாரா? முத்து என்ற படத்தில் நடித்தார். அதற்காக மு.க.முத்துவிடமோ, மதுரை முத்து குடும்பத்தாரிடமோ, முத்துராமன் மகன் கார்த்திக்கிடமோ அனுமதி வாங்கினாரா? அவையெல்லாம் எங்கள் தயாரிப்பு அல்ல என்று ஏ.வி.எம். நிறுவனம் சொல்லக்கூடும். ஏ.வி.எம் நிறுவனத்திலேயே வசந்தி என்ற பெயரில் படம் தயாரித்து வெளியிடப்பட்டது. தமிழ்நாட்டில் எத்தனையோ வசந்திகள் இருக்கிறார்கள். எந்த ஒரு வசந்தியிடமாவது ஏ.வி.எம். இப்படி அனுமதி கேட்டிருக்குமா? சிவாஜி என்ற தலைப்புக்காக சிவாஜி குடும்பத்தாரிடம் அனுமதி கேட்டதாகக் கட்டுமானப் பணிக்கு அடித்தளம் போட்டார்கள்.

அப்படியே அனுமதி கேட்பது என்றால் யாரிடம் கேட்டிருக்க வேண்டும்? வி.சி. கணேசனாக இருந்த நடிகர் திலகத்திற்குச் சிவாஜி கணேசனாகப் பெயர் சூட்டியவர் தந்தை பெரியார். அவருக்கு நேரடி வாரிசுகள் இல்லை. அவருடைய இயக்கத்திற்கும் உடைமைகளுக்கும் உரிமையுடைய திராவிடர் கழகம் இருக்கிறது. அவருடைய கொள்கைகளை முழங்கும் பெரியார் திராவிடர் கழகம் இருக்கிறது. ஏ.வி.எம்.மின் நிலைப்பாட்டின்படி பார்த்தால் இவர்களிடமல்லவா அனுமதி கேட்டிருக்க வேண்டும்? போக் சாலையில் உள்ள அன்னை இல்லத்திற்குச் சென்று அனுமதி கேட்டவர்கள் வேப்பேரியில் உள்ள பெரியார் திடலுக்குமல்லவா சென்று அதே அனுமதியைக் கோரியிருக்க வேண்டும்? கேட்பவன் கேணையனாக இருப்பான். எழுதுபவன் ஏமாளியாக இருப்பான் என்று கணக்குப் போட்டே ரஜினி+ஷங்கர் கூட்டணி, ஏ.வி.எம்மைப் பயன்படுத்திக் கொண்டு கட்டுமானப் பணிகளை ஈஃபில் கோபுரம் அளவுக்குக் கொண்டு சென்றது. அவர்கள் எதிர்பார்த்தது போலவே ஊடகங்கள் ஏமாளிகளாகி, சிவாஜி படக்குழு கக்கிய வாந்தியையெல்லாம் வழித்தெடுத்து வெளியிட்டன.
(மேலும் சுவாரஸ்ய கழுத்தருப்புக்கள் தொடரும்)

14 comments:

Anonymous said...

//சிவாஜி கணேசனாகப் பெயர் சூட்டியவர் தந்தை பெரியார். அவருக்கு நேரடி வாரிசுகள் இல்லை. அவருடைய இயக்கத்திற்கும் உடைமைகளுக்கும் உரிமையுடைய திராவிடர் கழகம் இருக்கிறது. அவருடைய கொள்கைகளை முழங்கும் பெரியார் திராவிடர் கழகம் இருக்கிறது. ஏ.வி.எம்.மின் நிலைப்பாட்டின்படி பார்த்தால் இவர்களிடமல்லவா அனுமதி கேட்டிருக்க வேண்டும்? //

முண்டம் மஹேந்திரன் அய்யா,

சிவாஜி என்ன பெரியாரின் பேடென்டா?
சிவாஜி ஒரு மராத்தா அரசனாக இருந்தவன்.அல்ப்பம்.எதுக்கெடுத்தாலும் பெரியார் பெரியார்;அல்ப்பம்.வேற வேலை இல்லையா உனக்கு?

கோவி.கண்ணன் said...

நீங்க என்ன சொல்ல வருகிறீர்கள் ?

சிவாஜி புகழில் குளிர் காய்கிறார்கள் ?
சிவாஜி புகழுக்கு களங்கம் கற்பிக்கிறார்கள் ?

என்னது மன்னிப்பு கேட்காவிட்டால் படப் பெட்டியை கொளுத்தப் போகிறீர்களா ?

இதெல்லாம் கொஞ்சம் ஓவர் !!!

ஓவர்.

Unknown said...

//முண்டம் மஹேந்திரன் அய்யா//

ஆமா யாருய்யா நீயி? பதிவு எப்ப வருமின்னு காத்துகினே இர்ந்து பின்னூட்டம் போட்ரே ஆனா அனானிங்க பேரை கெடுக்கிற மாதிரி இப்படி முண்டம்னு போட்றியே முண்டம் ?

Unknown said...

சிவாஜி புகழில் குளிர் காய்கிறார்கள் ?
சிவாஜி புகழுக்கு களங்கம் கற்பிக்கிறார்கள் ?

என்னது மன்னிப்பு கேட்காவிட்டால் படப் பெட்டியை கொளுத்தப் போகிறீர்களா ?

இதெல்லாம் கொஞ்சம் ஓவர் //

அலோ அலோ என்னது ஆண்டிமடத்தில் பொட்டிய தூக்க திட்டம் போட்றாங்களா? அதனால அலோ கேக்கலை கேக்கலை ஓவர் ஓவர் :)

ஜோ/Joe said...

அடுத்த விஜயகாந்த் படத்தின் தலைப்பு 'எம்.ஜி.ஆர்' -ஆம் .அவர் யார் கிட்ட போய் அனுமதி கேட்பார்ண்ணு பார்ப்போம் .அனுமதி கேட்கல்லீண்ணா என்ன நடக்கும்ண்ணும் பார்ப்போம்.

Anonymous said...

Rajiniyoda sondha peyar "Sivaji Rao". Athanaala avaru kitta first keataaranu yaaravathu keatu sollungappa!

Anbudan,
Anand Kumar

கருப்பு said...

சரியான கேள்விகள்தான் கேட்டு இருக்கிறீர்கள் மகேன்.

Anonymous said...

அடடா லோலாய் பண்ணாதிங்கப்பு. இத்தனை பில்டப் பண்றதைப்பாத்தா பயமா இருக்கு. மொதல்ல படம் வரட்டும்,பாத்துட்டு அடிச்சுக்கலாம்.

Anonymous said...

டேய் கேனப்பய்யா மகேந்திரா, நீ என்ன் பெரிய புடுங்கியா? சிவாஜி பத்தி உனக்கு என்னடா தெரியும் புடுங்கி. நீ இப்படியெல்லாம் எழுதுறதுக்கு பதிலா போய் தூக்கு மாட்டினு செத்துடலாம்.

அன்பு.

Anonymous said...

மன்னர் சிவாஜிக்கு ஏன் சிவாஜி என்ற பெயர் வைத்தார்கள்?
பரமசிவனிடம்தான் அனுமதி வாங்க வேண்டும் .

:)

PRABHU RAJADURAI said...

so, you too mahendran joined the bandwagon to add to the buildup :-)

(sorry for english)

Anonymous said...

If MK with 13 MPs can demand and get so much, what is wrong when
RajiniKanth and Shankar demand
so much as they have a record
of hits.RajiniKanth or Shankar
or MK- each wants to use their
position to their advanatage
and reap the maximum benefits.
Rajini or Shankar is not looting
public money like politicians.
Distributors know that if there
is a loss Rajini would come to
their rescue.

Anonymous said...

//சிவாஜி என்ன பெரியாரின் பேடென்டா?//

சிவாஜி என்ன சிவாஜி கணேசன் குடும்ப பேடண்டா, வந்துட்டானுக கேள்வி கேட்குறதுக்கு

Anonymous said...

உமக்கு வேறு வேலையே இல்லை. ஏதாச்சும் உப்பு பெறாத மேட்டரை பேசியே டைம்பாஸ் பண்ற வேலை.