1500 பேர் பலி


இந்தோனேஷியாவில் பயங்கர நிலநடுக்கம்:
1500 பேர் பலி ஜகார்த்தா, மே.
27-: இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவுப்பகுதியில் கடந்த
2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட பயங்கர பூகம்பம், அதை தொடர்ந்து ஏற்பட்ட சுனாமி பேரலைகள் பேரழிவை ஏற்படுத்தின. அதன் பிறகு அவ்வப்போது இந்தோனேஷியாவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டு அந்த நாட்டு மக்களை பயமுறுத்தி வந்தது.
ஜாவா தீவுப்பகுதியில் உள்ள யோசியாகார்த்தா பகுதியில் இந்த நிலநடுக்கம் இன்று அதிகாலை

4.23 மணிக்கு ஏற்பட்டது. சக்தி வாய்ந்த இந்த நில நடுக்கம்
6.2 ரிக்டர் அளவாக பதிவானது.
பூகம்பம் தாக்கியதில் கிழக்கு ஜாவா, மத்திய ஜாவா, கேதிரி உள்பட பல்வேறு பகுதிகளில் வீடுகள் இடிந்து தரை மட் டம் ஆனது. வீடுகளில் தூங் கிக்கொண்டிருந்தவர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடினார்கள். வீடுகள், கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி இதுவரை

1500 பேர் பலியானதாக தகவல் கிடைத்துள்ளது. ஆயிரக்கணக்கானவர்கள் காயம் அடைந்து பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சுற்றுலா பயணிகள் தங்கி இருந்த ஓட்டல்களும் இடிந்து விழுந்தன. மின்சார கம்பங்களும் சரிந்து விழுந்தன. இதனால் மின்சாரம் தூண் டிக்கப்பட்டு பல மணி நேரம் அந்த நகரம் இருளில் மூழ்கியது. அந்த நகரில் எங்கு பார்த்தாலும் இடிபாடுகளாக காட்சி அளிக்கின்றன. பூகம்பத்தில் பலியான வர்கள் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித் துள்ளனர்.
இந்த பூகம்பத்தால் சுனாமி அலைகள் ஏற்பட்டதா என்பதை அதிகாரிகள் உறுதி செய்யாவிட்டாலும் யோகியாகார்த்தா மாகாண கடற்கரையில் ராட்சத அலைகள் எழுந்தன. பல இடங்களில் கடல் நீர் ஊருக்குள் புகுந்தன.
பூகம்ப பேரழிவை தொடர்ந்து மீட்பு பணியில் ராணுவம் ஈடுபடுத்தப்பட் டுள்ளது. பல்வேறு பகுதிகளில் இருந்தும் ராணுவத்தை மத்திய ஜாவா பகுதிக்கு விரைய அதிபர் சுசிலோ பம்பாங் உத்தரவிட்டுள்ளார். வெளிநாட்டு உதவியையும் அவர் கேட்டு இருக்கிறார்.

1 comments:

வடுவூர் குமார் said...

ஜகார்த்தாவில் உள்ள மச்சானை கூப்பிட்டு கேட்டால்....அப்படியா? தெரியாதே என்கிறார்.இப்போது 4000க்கு உயர்ந்துவிட்டது.கொடுமைதான்