
சட்ட சபையில் விஜயகாந்த் நமது கற்பனை.
கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மாணத்தின் மீது பேசிய விஜயகாந்த்:
என்ன 14777 ஒட்டு வித்தியாசத்துல ஜெயிக்க வச்ச விருத்தாசலம் மக்களுக்கும் தமிழ்நாடு முழுக்க 2013455 ஓட்டு போட்டு 8.33 சதவீதம் வாங்கி அங்கீகாரம் கொடுத்த மக்களுக்கும். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்புன்னு சொல்லி என் பேச்சை ஆரம்பிக்கிறேன்.
கவர்னர் அய்யா அவுங்க தமிழ்நாடு முழுக்க அரிசி 2 ரூபாய்க்கு தருவேன்னு சொன்னத வரவேற்கிறேன் ஆனா 24536987பேரு தண்ணியிலாத இருக்கான் அதுபத்தி ஏன் பேசுல? காஷ்மீர்ல123654துப்பாக்கி இருக்கு ஆனா இங்க நம்ம போலீசோ பழைய துப்பாக்கியே வச்சிருக்கு. ஏன் சிந்திக்குனும்.
இல்லன்னா நான் உங்க எல்லாறையும் சிந்திக்க வப்பேன் தப்பு பன்னுன எம்.எல்.ஏ அல்லாரும் மன்னிப்பு கேட்டா உள்ள வருலாம்னு சொன்னாங்க தமிழ்ல எனக்கு புடிக்காத ஒரே வார்த்த மன்னிப்பு.
அன்னைக்கு மட்டும் நான் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டிருந்தா சுத்தி இருக்க செவுத்துக்கல்லாம் நீங்க வெள்ளயடிக்க வேண்டிதிருக்கும். தமிழ் நாட்டில மொத்த தொகுதி 234அதுல நாங்க போட்டியிட்டது 232ஜெயிச்சது ஒன்னு கிடச்ச ஓட்டு 2013455 அதால தான் சொல்லுரன் மக்கள் மாற்றத்த விரும்புராங்க. எந் தொகுதில மொத்தம் 85 கிராமமிருக்கு அங்க இருக்க நியாய வில கடை 35 பள்ளிகூடம்
55 விவசாயி35000டாக்டர் 546ஆறு 7 எனக்கு கெடச்ச ஓட்டு வித்தியாசம் 14777 அங்க இருக்க ஆஸ்பத்திரில மொத்தம் 785 நர்ஸுங்க இருக்காங்க ஆனா டாக்டருங்க 136 நோயாளி 5641 இது எப்படி சரியாகும்?
இவன் தனியாளுன்னு மட்டும் நீங்க கணக்கு போட்டா அது தப்பு மாநிலம் பூரா என் ரசிகர் மன்றம் 28878 மொத்த ரசிகர்கள்8647596 இந்தியாவோட சனத்தொக 110கோடி. நான் காஷ்மீர்ல பாகிஸ்தான் தீவிரவாதியவும் பாத்தன் அஸ்ஸாம்ல உல்பா தீவிரவாதியயும் பாத்தன். தமிழனென்று சொல்லடா தலைனிமிர்ந்து நில்லடாங்கரது எங்க ஸ்லோகன்.
அது மொத்தமா 2011 சட்ட சபைல கேட்கபோவுது அப்ப இந்த கருப்பு எம்ஜார் யாருன்னு மக்கள் காட்டுவாங்க . நேத்து ஜெயலலிதாவுக்கு குடுத்த நேரம் 30 நிமிசம் ஆனா எனக்கு குடுத்த நேரம் 15 நிமிசம். இது பத்தாது....என்ன இன்னும் பேச விடனும்... என்று பேசிக்கொண்டே போகிறார்
(அதற்குள் புது இயக்குனர் யாரோ கதை சொல்ல வருவதாக சுதீஷிடம் இருந்து போன் வரவே கிளம்பி போய்விடுகிறார்)
(. அதன் பின் கருணாநிதி பேச வருகிறார்:)

இங்கே பேசிய தம்பீ விஜி ஒன்றை சொன்னார் தமிழ்நாட்டில் மொத்த ரசிகர்கள் அவருக்கு 8647596 என்று ஆனால் உண்மை அதுவல்ல-864796 இதுதான் உண்மை (ஒருசீட்டை எடுத்து காட்டுகிறார்), இது அவரின் ரசிகர் மன்ற பொருப்பாளர் தந்த அறிக்கை. அப்புறம் நேரம் போதாது என்று சொன்னார் இவருக்கே நேரம் ஒதுக்கிவிட்டால் கழகக் கண்மணிகள் பேச நேரம் கிடைக்காது என்றாலும் சபாநாயகரிடம் இது குறித்து கலந்து பேசி ஆவன செய்யப்படும்.
நேற்று ஏதோ தனியாக வந்து வென்றுவிட்டதாக அம்மையார் சொல்கிறார் ஆனால் தனியாக இருப்போரிடம் எங்கள் வீரத்தை காட்டுவது அழகல்ல ஒரு முன்னாள் முதல்வர் இப்படி வெளியே பேசுவது நாகரீகமல்ல...அது திராவிட பரம்பரையின் அழகுமல்ல. " போருக்கு புறப்படடா தம்பீ என்று அன்று அண்ணா சொன்னார் இப்போது இந்த அண்ணன் சொன்னால் கழகத்தின் உடன்பிறப்புக்கள் பொங்கியெழுவார்கள்
எதிரிகளின் கூட்டம் காணாமல் போய்விடும்
ஆனால் பகுத்தரிவு பகலவனும் அண்ணாவும் சொன்னது அதுவல்ல
கடமை
கண்ணியம்
கட்டுப்பாடு
அதுவே கழகத்தின் மூச்சு இப்படி.........................
(பேசிக்கொண்டே போகிறார் அதற்குள் ஜெயலலிதா இல்லாததை தெரிந்துகொண்ட பாண்டுரங்கணும் சேகர் பாபுவும் பின்பக்க கதவுவழியாக உள்ளே குதிக்க ரகளை ஆரம்பமாகிறது.
(இப்படி எதுவும் நடந்துவிடக்கூடாது என்பதே அனைவரின் விருப்பமும்.... பார்ப்போம்)
1 comments:
படித்துவிட்டீர்களா சட்டமன்ற சண்டியர்கள் பாகம் இரண்டு?
Post a Comment