இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் போது நாடெங்கும் கலவரம் வெடித்தது.
ஹிட்லரின் நாஜி அரசுக்கு இரண்டு லட்சம் யூதர்களைக் கொல்ல, கிட்டத்தட்ட ஒரு வருடம் வேண்டியிருந்தது.
ஆனால், மூன்றே வாரத்தில் எந்த சர்வாதிகாரியின் ஆணையும் இல்லாமல் இரண்டு லட்சம் இந்தியர்களை இந்தியர் களே கொன்றார்கள்!
கடவுளரின் பெயரால் நடந்தன இந்தக் கொலைகள்.
இதைக் காண நேர்ந்த எந்த மனிதனுக்கும் பெரும் பாதிப்புகள் இருக்கும்! அதுவும், ஒரு நல்ல எழுத்தாளனுக்குக் கேட்கவா வேண்டும்?
46ல் பாதிக்கப் பட்ட எழுத்தாளர் ஒருவரின் சிறுகதைகள், இரண்டு... பானைச் சோற்றுக்குப் பதமாக!
அறியாமையின் நலன்
(ஆங்கில மொழிபெயர்ப்பிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தேன்... உருது தெரியாததால்!)
அந்த ட்ரிகர் அழுத்தப்பட்டதும் புல்லட் சினத்துடன் சுழன்று வெளிப்பட்டது.
அந்த ஜன்னலிலிருந்து எட்டிப் பார்த்த ஆள், இரண்டாய் மடிந்து தலைகுப்புற விழுந்தான் சத்தமின்றி.
அந்த ட்ரிகர் இரண்டாவது முறை அழுத்தப்பட்டது. புல்லட் காற்றைக் கிழித்து விசுக்கெனப் பறந்தது.
ஆட்டுத் தோல் பையில் தண்ணீர் எடுத்து வந்த வடநாட்டான் முகம் மண்ணில் குத்தி விழுந்தான். துளைபட்ட பையின் நீரும் அவன் ரத்தமும் கலந்து, நீண்ட கோடாகத் தெருவைக் கடந்தது.
மூன்றாம் முறை ட்ரிகர் அழுத்தப்பட்ட போது, புல்லட் குறி தவறி மண் சுவரில் புதைந்தது.
நாலாவது, ஒரு கிழவியை வீழ்த்தியது.
ஐந்தும் ஆறும் வீணாயின. யாரும் சாகவில்லை. யாருக்கும் காயம்கூட இல்லை!
துப்பாக்கிக்காரன் எரிச்சலடைந்தான். அப்போது எதிர்பாராமல் தெருவில் ஓடிவந்த அந்தக் குழந்தை, அவன் கண்ணில் பட்டது.
துப்பாக்கி வீரன் துப்பாக்கியை உயர்த் திக் குழந்தையைக் குறிவைத்தான். என்னடா செய்யறே? என்றான் அவன் நண்பன்.
ஏன்?
துப்பாக்கியில் தோட்டா தீர்ந்து போச்சே!
சும்மார்றா முட்டாள்...அது குழந்தைக்குத் தெரியவா போகுது?
தூக்கு
(இது நினைவில் பதிந்த கதையின் மொழிபெயர்ப்பு. வரிக்கு வரி மொழிபெயர்த்ததல்ல!)
கரண்ட் எப்போதாவது வந்துபோகும். ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் தீர்ந்து விட்டன. தையல் போட Ôகேட்கட்Õ (சிணீtரீணீt) கூடத் தீரும் தறுவாய்!
சாயங்காலம்.
அந்த இளம் டாக்டருக்கு, இது முப்பத்தாறாவது மணி நேரம் டியூட்டியில்!
சில பேஷண்ட்டுகள் செத்துப் போவதைச் செய்வதறியாது பார்த்துக் கொண்டிருப்பது, வேலையைவிடச் சோர்வு தரும் விஷயம்.
பெட்ஷீட்டுகளைத் துவைத்துப் போடக்கூட ஆளில்லை. பழைய ரத்தக் கறை படிந்த படுக்கைகளில் புதிய பேஷண்ட்டுகள். ஜன்னலில் கர்ட்டன்ஸ் இல்லை. அதற்குப் பதிலாகப் புடவை களைத் தொங்கவிட்டிருந்தார்கள்.
அசதி, கோபம், பசி... மும்முனைத் தாக்குதலில் தோற்ற டாக்டர், வீட்டுக்குப் போக பையை எடுத்தார். அப்போது “
புதிய பேஷண்ட்டை இரு காந்தி பக்தர்கள் கைத்தாங்கலாக அழைத்துவர, குறுக்கே இருந்த சேரை நகர்த்தி வழி செய்த ஆங்கிலோஇந்திய நர்ஸ் கெஞ்சினாள்.
இன்னொரு கற்பழிப்பு கேஸ்.
இதற்குமுன் வந்த பெண்கள் போலவே வெறித்த பார்வை. முனகல் தாளகதி தவறாமல் மிருதுவாக வெளிப்பட்டபடி இருந்தது.
அவள் பிளவுஸ் கிழிந்து, மார்பகங்கள் தெரிந்தன. கடித்த காயங்கள் பல இடங்களில்... கண்டிப்பாகத் தையல் போடவேண்டிய ஆழக் காயங்கள்!
டாக்டரால் காயத்தைச் சரியாகப் பார்க்க முடியவில்லை.
வெளிச்சமும் குறைவு!
துணைக்கு வந்தவர்கள், கையைப் பிசைந்தபடி டாக்டர் அருகில் நின்றனர்.
ÔÔஇப்படி வெளிச்சத்தை மறைச் சுக்கிட்டு நின்னா, நான் எப்படி என் வேலையைச் செய் வேன்? போங்கய்யா வெளியே!ÕÕ
கூட வந்தவர்கள் புறப்படலா னார்கள்.
திரைச்சீலையைத் தூக்கினால் வெளிச்சம் வர வாய்ப்பு உண்டென எண்ணி, போகிறவர்களிடம் ÔÔஉம்... அப்ப டியே அந்தப் புடவையைக் கொஞ்சம் மேலே தூக்கு!ÕÕ என்றார் டாக்டர்.
சற்றும் எதிர்பாராமல் படுக்கையில் கிடந்த பெண் முனகலை நிறுத்திப் பேசலானாள்...
ÔÔவேணாம்... என்னை அடிக்காதீங்க! இதோ, இதோ... புடவையைத் தூக்கிடறேன்!ÕÕ என்றபடி தனது புடவையைத் தூக்க முயன்றாள்.
ÔÔஐயையே... அது இல்லேம்மா!ÕÕ தடுத்து ஆசுவாசப்படுத்தினாள் நர்ஸ்.
கோபம், அயர்ச்சி, பசி... பாவம், இளம் வயதும் சேர்ந்ததால் டாக்டர் குலுங்கிக் குலுங்கிக் குழந்தை மாதிரி அழ ஆரம்பித்துவிட்டார்!
இந்த இரு சிறுகதைகளில் எத்தனை சதவிகிதம் கற்பனையோ... தெரியாது. 40களில் எழுதப் பட்ட உலகத்தரம் வாய்ந்த கதைகள் எழுதியவர் சதத் ஹஸன் மன்டோ.
மும்பையில் ரத்தமும் சதையுமாக நடமாடிய மனிதர். அதுவும், எங்கள் சினிமா துறையில் என்றதும் முதலில் என்னால் நம்ப முடியவில்லை!
சினிமா எழுத்தாளராக இருந்த திரு.மன்டோ, இந்தியா இருவேறு நாடுகளாகப் பிரிந்தபோது, பாகிஸ்தா னுக்குச் செல்லும் முடிவை எடுத்தவர்.
அங்கு தண்டா கோஷ்ட் (குளிர்ந்த மாமிசம்) என்ற கதையை எழுதியதற்காகக் கைது செய்யப்பட்டவர். ஒரு நாடோடியின் அந்தஸ்துடன் பாகிஸ்தானில் மாண்டவர். நடுநிலை அவரை இந்த அவலநிலைக்கு ஆளாக்கியது.
ஹே ராம் படத்துக்கான ஆராய்ச்சி யில் ஈடுபட்டிருந்தபோது, தாமதமாக எனக்குக் கிடைத்த ஈடில்லா எழுத்தாளர் மன்டோ. எனது மொழிபெயர்ப்பால் காயமுற்றிருந்தால் ஒழிய, உருதுவில் எழுதிய இவரின் கதைகள் உலகத்தரம் வாய்ந்தவையே!
ஹே ராமில், அந்தக் காலகட்டத்தின் உணர்வுகளைக் குறுகிய காலத்தில் எனக்குப் போதித்த குரு சதத் ஹஸன் மன்டோ.
Ôநான் கொஞ்சம் முன்னாடி பிறந் திருந்தால், ஜெயகாந்தனைச் சந்தித்தது போல், சுந்தர ராமசாமியைச் சந்தித்தது போல்... சத்யஜித் ரே, திலீப்குமார் போன் றோரைச் சந்தித்ததுபோல் இவரையும் சந்தித்திருக்கலாமோ?Õ என்ற அசட்டுக் கனவுகள் காண்பதுண்டு நான். கையில் ஒரு பழத்தை வைத்துக் கொண்டு, தட்டில் இருக்கும் பழத்துக்கு அழும் குழந்தைபோல நான். நானும் சில உன்னதமான மனிதர்களின் சகஜீவி என்பதை எப்போதாவது உணராமலா செத்துப் போவேன்?
இப்போது உணர ஆரம்பித்திருக்கிறேன். முழுதும் உணர நேரம் இருப்பதாகத் தோன்றுகிறது! நல்லவற்றை எனக்கு உணர்த்த, நல்ல வாசிப்புள்ள நண்பர்கள் பலர் இருக்கிறார்கள். இன்னும் நான் சந்தித்த விவீறீஷீs திஷீக்ஷீமீனீணீஸீ, யிமீணீஸீ சிறீணீuபீமீ சிணீக்ஷீக்ஷீவீமீக்ஷீ போன்ற ஐரோப்பிய மேதாவிகள் பற்றியும் சொல்லவிருக்கிறேன்.
கவலை வேண்டாம்... அந்த மேதை களுக்கும் காதல் உண்டு. ஆகையால், காதலை உதாசீனப்படுத்திவிட்டு, வெறும் அறிவுப்பூர்வமான விஷயங்களில் நான் திளைப்பதாக நினைத்துவிடாதீர்கள்!
ஈரம் காய்ந்து வறண்டுவிடாமல் இருக்க, அவ்வப்போது காதல், பூடகமான விரும்பும் எல்லாம் சேர்க்காமல் இருப்பேனா? கோடம் பாக்கத்தில் வளர்ந்த பிள்ளையாச்சே நான்! இங்கிதம் தெரிந்த இந்தியன் அல்லவா நான்? கவலை வேண்டாம்!
நிஜத்தைப் பேச வேண்டும். ஆனால், நேரடியாகப் பேசக்கூடாது என்ற சமூக இடக்கரடக்கல் தெரிந்தவன் நான்.
அதென்ன... இடக்கரடக்கல்னா? என்று யாராவது சிலர் கேட்பர் எனும் ஆங்கில வார்த்தைக்கு நிகரான தமிழ் வார்த்தை. இன்னும் சொல்லப்போனால், அதையும் தாண்டி (புனிதமானது) பன்முகம் கொண்ட வார்த்தை!
வெட்கப்படாமல் பத்திரிகையில் பேட்டிகளில், கட்டுரைகளில் உபயோகித்தால் பழக்கமாகிவிடும்!

நன்றி - ஆனந்த விகடன்

2 comments:

நியோ / neo said...

இங்கே என்னை அழைத்ததற்கு நன்றி மகேந்திரன்!

அந்த வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்ட பெண்ணின் கதை பற்றிப் படிக்கையில் எரிந்து கொண்டிருக்கும் சதையின் வாசம் அடிக்கிறது - வலிக்கிறது.

'மகாநதி'யில் கிருஷ்ணசாமியின் பெண் தூக்கத்தில் உளறும் காட்சியும் நினைவலையில் மோதுகிறது.

இப்போதைக்கு மேலே எழுத இயலவில்லை. மீண்டும் வருவேன். நன்றி நண்பரே :)

Unknown said...

இதே வலிக்கு நானும் ஆளான தாலேயே இந்த கதை விகடனில் இருந்து மறுபதிப்பு பெற்றது