தோற்ப்பது எங்களுக்கு புதிதல்ல என்று ம.தி.மு.க கொள்கை(?) பரப்புச் செயலாளர் திரு நாஞ்சில் சம்பத் பொதுக்கூட்டத்தில் பேசியுள்ளார் அதற்கு நம்ம கமெண்டு

நா.ச: தேர்தலில் தோற்றுப்போவது எங்களுக்கு புதிதல்ல மக்களை மீண்டும் சந்திப்போம்( ஆமாம்யா இப்பிடியே பேசிக்கிட்டுருந்தா இப்ப கிடச்சதகூட கோட்ட வுட்டுறுவ)

நா.ச:ஆனால் அதிமுக தோற்றுப்போனதுதான் கவலையாக இருக்கிறது( வைகோ கொஞ்சம் பாத்துக்குங்க அம்மா வாழ்கனுட்டு போயிட போறார்)

நா.ச: எங்கள் வாக்குறுதிகள் நிராகரிக்கப்பட வில்லை பத்திரிகை பணபலம் தேசிய தலைவர்களால் தோற்றுப்போனோம்(ஒருவேள சோனியாம்மாவ சொல்றாறோ? அப்பவும் குமுதம் தினமலர் தினத்தந்தி இந்து லாம் உங்களுக்கு சப்போர்டுதானப்பு?)

நா.ச: எங்களை மத்திய கூட்டணியில் இருந்து விலக சொன்னார்கள் மறுத்துவிட்டோம். என்னிடம் கேட்டார்கள் நான் அம்மாவிடம் கேட்டேன் அவர்கள் விலகவேண்டாம் என்று கூறியதால் விலகவில்லை( வைகோ நீங்க கொஞ்சம் கவனமாத்தேன் இருக்குனும் கிளிக்கு ரெக்க மொளக்குது)

நா.ச: இனி ம.தி.மு.க வுக்கு மந்திரி பதவி கேட்போம் (ஆமா இரண்டு வருஷமானத்துக்கு பத்திரிக கேட்டே குடுக்கல எந்திரிங்கறாங்க இதுல மந்திரி போய்யா யோவ்)

நா.ச: சபையில் இருந்து வெளியேற்றிவிட்டு மன்னிப்பு கேட்டால் உள்ளே விடுவோம் என்கிறார்கள் யாரிடம் கருணாநிதியிடமா ஆவுடையப்பனிடமா (யாருகிட்டன்னு சொன்னா கேப்பீங்களா?)

நா.ச:அதிமுக காரன் ஒருநாளும் மண்ணிப்பு கேட்க மாட்டான்(மன்னிக்க தெரிஞ்சவன் மனுசன் மன்னிப்பு கேட்க தெரிஞ்சவன் பெரியமனுசன் - விருமாண்டி)

நா.ச:தோல்விய தாங்க முடியாமல் எழுபத்து நாலு அதிமுக காரன் தற்கொல பண்ணிகிட்டான் இதுமாறி ஒரு கட்சி ஒலகத்துல உண்டா( இல்லங்க ஆனா இப்பிடியே போனா அந்த கட்சியே இருக்காதேன்னு அம்மா பொலம்புராங்களாம் தெரியுமா?)

நா.ச: திமுக வுக்கு எதிர்கட்சியாக நாங்கள் இருக்கிறோம் ( அப்ப அதிமுக? ஓகோ புரிது புரிது வைகோ நாஞ்சொன்னது சரிதான் புலி காட்டவுட்டு ஊட்டுக்கு போவுது பாத்து கட்டி போடுங்க)


5 comments:

மகேஸ் said...

உங்களுடைய பதிவுகள் நன்றாக இருக்கின்றன. நீங்கள் என்னுடைய இயற்பெயரில் எழுதுகிறீர்கள். நான் மகேஸ் என்ற பெயரில் எழுதிவருவதால் மற்றவர்களுக்குக் குழப்பம் வராது. நன்றி.

லக்கிலுக் said...

சூப்பர்மா.....

Unknown said...

மகேஸ் நான் உங்களுடைய இயற்பெயரில் எழுதவில்லை என்னுடய பெயரும் மகேந்திரன் தான்
இதுவேற காப்பிரைட் கேட்டு கேஸ் போட்டுடாதீங்க :)

நியோ / neo said...

>> ( அப்ப அதிமுக? ஓகோ புரிது புரிது வைகோ நாஞ்சொன்னது சரிதான் புலி காட்டவுட்டு ஊட்டுக்கு போவுது பாத்து கட்டி போடுங்க) >>

கோபலசாமிக்கு அம்மா கூடிய சீகிரம் ஆப்பு வச்சிருவாங்க போலயே! ;)

Unknown said...

// கூடிய சீக்கிரம் ஆப்பு// வேண்டாம் இன்னும் அடுத்த தேர்தல் வரை ஆள்வேண்டும் பேச?