இனி வாரா வாரம் நான் படித்ததில் ரசித்ததுகளை சுட்டுப் போடுறேன் இந்தவாரம் விகடன்

கோடம்பாக்கத்து லேட்டஸ்ட் ஹாட் டாப்பிக் ‘மாயா’! ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, ஆங்கிலம் எனப் பல மொழிகளில் தயாராகிற ஹாலிவுட் படம்.
‘‘அப்படி என்ன படம் அது?’’ என்று ஆர்வமாக, படத்தின் கேமராமேன் அசோக்குமாரிடம் விசாரித்தால்...
‘‘நான் மட்டும் இதைப் பத்திச் சொல்றது சரியா இருக்காது. மாயா படத்தோட கதையை எழுதினது ராண்டார்கை’’ என அவரை நம்மிடம் அறிமுகப்படுத்த,
‘‘நமீதா...ஆ! இப்படிச் சொல்ற மாதிரியான ஒரு த்ரில் படம் தான் மாயா!’’ என்கிறார் ராண்டார்கை.
‘மாயா’ நமீதா பற்றிப் பேசப் பேச உற்சாகமாகிறார்கள் இருவரும்.
‘‘மாயமும் மர்மமும் நிறைந்த ஒரு பெண் மாயா. உலகம் தழுவிய படம் இது. அழகும், மர்மமும்தான் இந்தப் படத்தோட மொழி. அப்படி ஒரு கேரக்டருக்கு யார் பொருத்தமாக இருப் பாங்கன்னு யோசிச்சப்ப சிக்கினவர்தான் நமீதா.

இந்த ஹாலிவுட் படத்தோட இயக்குநர் எரிக். ஹாலிவுட் சினிமாவின் இளம் இயக்குநர். மாயா கேரக்டர்ல நமீதாதான் நடிக்கப்போறாங்கன்னு சொன்னதுமே மொத்த டீமுக்குமே பிடிச்சுப்போச்சு!’’ என்கிற ராண்டார்கை,

‘‘வாழ்க்கையிலேயும் சரி, தினசரி நடவடிக்கைகள்லேயும் சரி... எதையாவது ஒண்ணைத் தேட ஆரம்பிச்சு, அதைத் துரத்த ஆரம்பிச்சா வாழ்க்கை சுவாரஸ்யமாயிடும். இதுதான் இந்தக் கதைக்கு அடிப்படை.
அமெரிக்காவில் வசிக்கும் இரண்டு பெண்கள் இந்தியாவுக்கு வர்றாங்க. இதில் ஒருவர் ரஷ்யாவைச் சேர்ந்தவர். மற்றவர், கேரளாவில் இருந்து அமெரிக்கா போய் செட்டில் ஆனவர். கேரளப் பெண்ணும் ரஷ்யப் பெண்ணும் சேர்ந்து கேரளப் பெண்ணின் பூர்விக கிராமம், மனிதர்களைப் பற்றி விசாரிக்கிறாங்க. ஆராயறாங்க. அந்த ஆராய்ச்சியில், பெரிய பங்களா ஒண்ணு இருப்பது தெரிய வருது. அங்கிருந்து ஆரம்பிக்குது கதை. அந்த திகில் பங்களாவில் வாழ்கிற மர்மப் பெண்தான் மாயா!’’ என்று முத்தாய்ப்பு வைக்கிறார்.
‘‘படத்துல என்ன மெஸேஜ் வெச்சிருக்கீங்க?’’ என்றால், சிரிக்கிறார்கள்.
‘‘மெஸேஜ் சொல்றதுக்கு இது என்ன செல்போனா? சினிமா
சார்! ரெண்டு மணி நேரம் ரிலாக்ஸ்டாக, கூடவே கொஞ்சம் த்ரில்லாக படத்தைப் பார்த்து என்ஜாய் பண்றதுக்குத்தான் இந்தப் படம். ரொம்ப வித்தியாசமா ஆரம்பிக்கும் இந்தப் படத்தில் திகில், திகைப்பு, கிளாமர், அழகுன்னு எல்லாமே சரியான கலவையில் இருக்கும். அடுத்த மாசம் ஊட்டியில ஷ¨ட்டிங். நமீதா அசத்தப்போறாங்க பாருங்க!’’ என்கிறார்கள் இருவரும் கோரஸாக.

ஹாய் மதன் கேள்வி-பதில்
பெ.பசுமலை பாரதி, மதுரை.
கருத்தடை ஆபரேஷனை பெண்களுக்கு நிகராக ஆண்களும் செய்து கொள்வதில்லையே, ஏன்?
ஆபரேஷன் பண்ணிக்கொண்டால், எதிர்பார்ப்புடன் ‘போற்றிப் பாது காத்து’ வரும் தன் ஆண்மையும் விறைப்புத்தன்மையும் தன்னைவிட்டுப் போய்விடுமோ என்கிற அபத்தமான பயம் ஆண்களுக்கு உண்டு. (உண்மையில் ‘அதற்கும்’ ஆபரேஷனுக்கும் சம்பந்தமே கிடையாது!) வேறு வழி? பெண்கள்தான் கருத்தடை பண்ணிக்கொள்ள வேண்டியிருக்கிறது. விளைவுகளைச் சுமக்கப்போகிறவள் அவள்தானே!

( நன்றி-விகடன்)

சொன்னாலும் சொல்லுவாங்க: (இது சொந்தசரக்கு)



ஒன்னுமில்ல நைனா. ஜெவோட இந்த அறிக்கைய பாத்ததும் இப்படியாச்சு

கலைஞர்: தேர்தலில் தோற்றுப் போனதால் தனது கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்யவேண்டும் ஜெயலலிதா.
ஜெயலலிதா: பெறும்பான்மை அரசாக இல்லாததால் தி.மு.க. சட்டசபையை கலைக்க வேண்டும்.
ராமதாஸ்: திருமாவளவன் மீண்டும் தமிழ் பாதுகாப்பு இயக்கத்தில் இணைவதற்கு அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியே வர வேண்டும் .
வைகோ: 35 சீட்டு கொடுத்தும் 5 தான் ஜெயிச்சதுக்கு தயாந்திமாறன் தான் காரணம்.
விஜய. டி. ராஜேந்தர்: ஏய் நான் சொன்னேன், நின்னேன், வீராச்சாமி வருது. அதுல ஜெயிப்பான் பாரு இந்த விஜய டி ஆரு.
ரஜினிகாந்த்: தமிழ் நாட்டின் நெப்போலியன் கலைஞர்(வீரத்துலதான்..தைரிய லட்சுமி மாதிரி)


அந்தி மழையில் இருந்து:

குதிரை மீது தண்ணீரை ஊற்றிக் குளிப்பாட்டிக்கொண்டு இருந்தான் தேசிங்கு. குளிர்ந்த நீரை ரசித்த குதிரை,'' மன்னா, மிருகக் காட்சி சாலையில் விலங்குகளுக்கெல்லாம் ².சி. வைத்திருப்பதாகப் படித்தேன். அதுவும் மலைப்பாம்புக்குக் கூட ஏ.சி.யாமே.. எனக்கு ஒன்று வைத்து தரக்கூடாதா..வெயில் தாங்கமுடியவில்லையே..'' என்று சொல்ல..¦¼ன்ஷனானான் தேசிங்கு.
''ஏய்..இப்படிக் கேட்டாயானால் இந்தத் தண்ணீர் குளியலும் உனக்கு கிடைக்காமல் போய்விடும். ஜாக்கிரதை..விஷயத்துக்கு வருகிறேன். கவனமாகக் கேள். ஐக்கிய முற்போக்கு அரசின் இரண்டாம் ஆண்டு விழா கடந்த 22ஆம் தேதி கொண்டாடப்பட்டது. டெல்லியில் பிரதமர் இல்லத்தில் நடத விருந்தில் கூட்டணி கட்சியினர் கலந்துகொண்டார்கள். கலைஞர் மட்டும், சðடசபை, கவர்னர் உரை ஆகியவற்றால் போகவில்லை..''
''சரி...வைகோ?''
''அவருக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டது என்றுதான் டெல்லி தலைவர்கள் கூறுகிறார்கள். ஆனால் சன் டிவி செய்தியோ அனுப்பப்படவில்லை என்கிறது. வைகோவோ நான் போய் அவர்களை தர்மசங்கடத்தில் ஆழ்த்த விரும்பÅ¢ல்லை என்கிறார். மூன்று செய்திகள் வருகின்றன. மொத்தத்தில் வைகோ போகவில்லை..''
''கலைஞர்தான் அவரை கூட்டணியிலிருந்து விலக்குமாறு கேட்டுகொண்டாரே..''
''அதுதான் இப்படி செயல்படுத்தப்படுவதாக வைத்துக்கொள்ளேன். இட ஒதுக்கீடு பிரச்னை இப்படி மண்டல் 2 என்று அழைக்கப்படும் அளவுக்கு பிரச்º¢னை ஆகிவிட்டதல்லவா? இதிலும் அரசியல்தான் இருக்கிறது என்கிறார்கள். மத்திய மனிதவளத் துறை அமைச்சர் அர்ஜூன்சிங்கை கழற்றிவிட சோனியாவும் மன்மோகன்சிங்கும் விரும்பினார்களாம். இதை உணர்ந்த அர்ஜூன்சிங், அவர்களுக்குத் தெரியாமல் இந்த இட ஒதுக்கீட்டுப் பிரச்னையை விசிறி விட்டுவிட்டார். இது பெரிதாகி, சோனியா, மன்மோகன் இருவராலும் தீர்க்கமுடியாத நிலையை எட்டிவிட்டது!''
''இதனால் அர்ஜூன்சிங்குக்கு என்ன லாபம்?''
''மடக் குதிரை என்றால் சரியாகத்தான் இருக்கிறது. இப்போது அர்ஜூன்சிங்கை பதவியிலிருந்து விலக்கமுடியாது. விலக்கினால் சோனியா இட ஒதுக்கீட்டுக்கு எதிரானவர் என்ற பேச்சு வந்துவிடும். அதை யாரும் விரும்பமாட்டார்களே''
''தாக்குப் பிடித்தலே அரசியல்!'' பொன்மொழி உதிர்த்தது குதிரை.
''தோல்விக்குப் பிறகு அதிமுக அமைதியாக இருக்கிறது. பல இடங்களிலும் ஆட்களை அனுப்பி விசாரணை நடத்திக்கொண்டிருக்கும் ஜெயலலிதா விரைவில் அதிமுகவில் நிறைய ஆட்களை தூக்கி கடாசுவார் என்று பேச்சு அடிபடுகிறது!''
''இÐ இருக்கட்டும் மன்னா.கூட்டணி ஆட்சி விவ¸¡ரம் என்ன ஆச்சு?''
''திமுக ஆட்சியில் காங்கிரசுக்கு பங்கு கொடுக்கவேண்டும் என்று காங்கிரஸ் எமெலே கூட்டத்தில் தீர்மானமே போட்டுவிட்டார்கள். ஐந்து பேருக்கு அமைச்சர் பதவி வேண்டும் என்று இன்பார்மாலாக கோரிக்கை வைக்கப்பட்டது. கலைஞர் டெல்லியில் பேசிக்கொள்ளலாம் என்றிருக்கிறாராம்! அநேகமாக அவர் பாமகவையும் மந்திரிசபைக்குள் இழுப்பார் என்ற கருத்து உள்ளது! அவர் இன்னும் இரு வாரங்களில் டெல்லி செல்லும்போது இது பற்றி அறிவிக்கக்கூடும்!'' என்ற தேசிங்கு தண்ணீர் அடிப்பதை நிறுத்திவிட்டு குதிரைய லாயத்துக்கு அழைத்துப் போனான்.



0 comments: