கருத்து சுதந்திரம்...
கடந்த மே, 26--&ம் தேதியை இந்திய திரைப்பட வரலாற்றில் சர்ச்சைக்குரிய நாளாகப் பார்க்கிறார்கள். பலத்த சர்ச்சைகளுக்குப் பிறகு இரண்டு சினிமாக்கள் அன்றைய தினத்தில்தான் இந்தியாவில் ரிலீஸாகி இருக்கின்றன. ஒன்று ‘தி டா வின்சி கோட்’ என்ற ஆங்கிலத் திரைப்படம். இன்னொன்று... அமீர்கானின் ‘ஃபனா’ என்ற இந்தித் திரைப்படம்.

‘தி டா வின்சி கோட்’ படத்தில் இயேசு கிறிஸ்துவுக்குத் திருமணம் நடந்து குடும்பஸ்தராக இருந்ததாகச் சித்திரிக்கப்படவேதான் சர்ச்சை. அதாவது கிறிஸ்தவர்களின் நம்பிக்கைகளுக்கு எதிராக இயேசு காட்டப்படுவதால், அவர்களது உணர்வுகள் இந்தக் காட்சியமைப்புகளால் காயப்படும் என்று சுட்டிக் காட்டப்பட்டது. ஆனால் ‘ஃபனா’ விஷயம் இதற்கு நேர்மாறானது. படம் தெரிவிக்கும் கருத்து சர்ச்சைக்குள்ளாகவில்லை. படத்தின் ஹீரோவே பிரச்னைக்குரியவராக மாற்றப்பட்டிருக்கிறார்.
‘குஜராத் மக்களின் உணர்வுகளுக்கு எதிராகப் பேசிய அமீர்கான், பகிரங்கமாக மன்னிப்புக் கேட்காவிட்டால், அவரது திரைப்படத்தை குஜராத் முழுவதும் திரையிட விடமாட்டோம்’ என்று சிலர் கொக்கரித்துக் கிளம்பி இருப்பது தான் விவகாரத்துக்கான காரணம். பி.ஜே.பி&யின் இளைஞர் அணியிடம் இருந்து வந்த இந்த அறைகூவலைக் கண்டு பயந்து, குஜராத் திரையரங்க உரிமையாளர்கள் சங்கம், ‘ஃபனா’வை வெளியிட மறுக்கிறது. எதிர்ப்பாளர்களின் அச்சுறுத்தலுக்கு தியேட்டர் உரிமையாளர்கள் அடிபணிந்ததன் மூலம் யுவ பாரதிய ஜனதாவின் சட்டாம்பிள்ளைத்தனத்துக்கு வெற்றி கிடைத்துள்ளது.
அமீர்கானின் மீது குஜராத் பி.ஜே.பி&யினருக்கு அப்படி என்ன கோபம்?

நர்மதா அணையின் உயரத்தை அதிகரிப்பதால் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று சொல்லி, அந்த மக்களுக்கு ஆதரவாக அமீர்கான் குரல் கொடுத்தார். பாதிக்கப்படும் மக்களுக்காகப் பட்டினிப் போர் நடத்திய மேதா பட்கருக்கு அமீர்கான் ஆதரவாகக் கருத்துச் சொன்னார்.
குஜராத் விவசாயிகளின் நலன்கள் பாதுகாக்கப்படுவதற்கு அணையின் உயரம் அதிகரிக்கப்பட வேண்டும் என்பது குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் நிலைப்பாடு. எனவே அமீர்கானின் கருத்து, மோடியின் கருத்துக்கு விரோதமான கருத்தாகக் கருதப்பட்டுவிட்டது.

அதுமட்டுமல்ல, அமீர்கான் இப்படி பாதிக்கப்படும் மக்களுக்கு ஆதரவாகக் குரல் எழுப்பியதை எதிர்த்து முதலில் குஜராத் மாநிலத்தில் ஆர்ப்பாட்டங்களைத் தூண்டி விட் டதே காங்கிரஸ் இயக்கத்தினர்தான். காங்கிரஸ் கட்சியும் பி.ஜே.பி&யும் அரசியலில் இணைய முடியாத இரு துருவங் களாக மக்களிடம் தங்களைக் காட்டிக் கொண்டிருந்தாலும், அமீர்கான் விஷயத்தில் மட்டும் இரண்டு தரப்பும் ஒரே நிலைப் பாட்டை எடுத்திருக்கின்றன. இப்படிப்பட்ட அரசியல் விநோதங்கள் எப்பவாவது குஜராத்திலும் நடப்பதுண்டு.
மாநில நலன், சாதி, மதம், மொழி, இனம் போன்ற விஷ யங்கள் உணர்ச்சிவயப்பட்ட நிலையில் அணுகப்படும்போது, ஆழமான விவாதங்களை நடத்த இயலாது. பெரிய அணைத் திட்டங்களுக்கு மாற்றான நீர்ப்பாசன வசதிகள் குறித்தோ, பெருந்திட்டங்களால் பாதிக்கப்படும் சாதாரண மக்கள் வாழ்க்கை நடத்துவதற்குத் தேவையான மாற்றுத் திட்டங் கள் குறித்தோ சாதரணமாக யாரும் கருத்துச் சொல்லிவிட முடியாது. அதிகாரம் படைத்தவர்களின் கருத்துக்கு மாற்றான விஷயங்களைப் பேசும் தனிநபர்களும், சிறு குழுக்களும் பல இடங்களில் கேலி செய்யப்படுவார்கள் அல்லது அச்சுறுத்தப்படுவார்கள்... அல்லது தாக்கப்படுவார்கள்! இது வாடிக்கையாக நடந்து கொண்டுதான் இருக்கிறது.
ஒரு தனிமனிதன், தனது கருத்துக்களை சுதந்திரமாக வெளியிடலாம். இதைத்தான் இந்திய அரசியல் சட்டம் அடிப்படை உரிமையாக வழங்கியிருக்கிறது. ஆனாலும் ஒருவர் தனது கருத்தை வெளியிடும்போது அச்சுறுத்தல்களும் தாக்குதல்களும் நடப்பது ஏன்? அரசாங்கமோ அல்லது ஒரு குழுவோ தனிநபரின் சுதந்திரத்துக்கு எதிராகச் செயல்படும்போதெல்லாம் இதுபோன்ற கேள்விகளும் தவறாமல் எழுகின்றன.
ஜவஹர்லால் நேரு பிரதமராக இருந்த காலத்திலேயே கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரான செயல்கள் நடந்திருக்கின்றன. ஏ.டி.கோர்வாலா என்பவர், விவேக் என்ற புனைப்பெயரில் நேருவின் ஆட்சியை விமர்சனம் செய்து ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ ஆங்கில நாளிதழில் கட்டுரை எழுதிக் கொண்டிருந்தார். நேருவின் ‘அறிவுறுத்தலு’க்குப் பிறகு அவரிடம் இருந்து கட்டுரை வாங்கிப் போடுவதை நிறுத்திவிட்டது அந்த நாளிதழ். இந்த சம்பவத்தைக் கேள்விப்பட்ட மற்ற பத்திரிகைகளும் குறிப்பிட்ட அந்தக் கட்டுரையாளரின் கட்டுரைகளை வாங்கிப் பிரசுரிப்பதை நிறுத்திக் கொண்டு விட்டன. அவரை எழுத அழைத்தால் நேருவின் மனம் வருத்தமடையும் என்று அவர்கள் நினைத்ததாலேயே இப்படி செய்தார்கள். ‘நமக்கு இனிமேல் யாரும் எழுத வாய்ப்பளிக்க மாட்டார்கள்...’ என்பதைப் புரிந்துகொண்ட கோர்வாலா, தானே ஒரு வாரப் பத்திரிகையைத் தொடங்கி விட்டார். அந்தப் பத்திரிகைக்குப் பெரிய அளவில் சர்குலேஷன் இல்லை. இருந்தாலும், வேறு வழியின்றி தனது கருத்துக்களை அதில் எழுதி வந்தார். அப்படித்தான் அவரால் செய்ய முடிந்ததே தவிர, அதிகாரம் படைத்தவர்களை எதிர்த்து நியாயமான கருத்துக்களைக்கூட அவரால் தைரியமாகச் சொல்ல முடியவில்லை.
இப்படி மறைமுகமாகத் தொடங்கிய தணிக்கை, நெருக்கடிநிலை காலத்தில் உச்சக்கட்டத்தை அடைந்தது. அதன்பிறகு வந்த காலகட்டங்களில் அச்சுறுத்தல்கள் வேறுவித மாக மாறின. படித்துப் பார்க்காமலேயே புத்தகங்கள் தடைசெய்யப்பட்டன. சல்மான் ருஷ்டி எழுதிய ‘சாத்தானிக் வெர்சஸ்’ என்ற நூல், இஸ்லாமிய நாடுகளில் தடைசெய்யப்படுவதற்கு முன்னரே இந்தியா வில் தடை செய்யப்பட்டது. டெல்லி வீதியில் சப்தர் ஹாஸ்மி என்ற நாடகக் கலைஞர் கொல்லப் பட்டார். எம்.எப்.ஹ§சேனின் ஓவியங்கள் நாசப்படுத்தப்பட்டன. பிரதீப் தால்வியின் ‘கோட்சே’ நாடகத்தைத் திரையிட முடியவில்லை. தீபா மேத்தாவால் அவரது ‘வாட்டர்’ திரைப்படத்துக்கான படப்பிடிப்பை நடத்த முடியவில்லை. அழுகிய முட்டைகளும் தக்காளிகளும் பிடித்திருந்த இடத்துக்குப் போட்டியாக செருப்புகளும் துடைப்பங்களும் புதிதாக முளைத்தன. இவை எல்லாவற்றுக்கும் காரணம், அரசியல் சக்திகள் சகிப்புத் தன்மை இல்லாமல் பிரச்னைகளை பூதாகரப்படுத்தி அச்சுறுத்தும் நிலைக்கு மாறியதால்தான்!
வன்முறைப் பாதைக்குத் தெரிந்ததெல்லாம் தங்கள் கருத்துக்களுக்கு விரோதமான குரல்கள் கேட்டுவிடக் கூடாது என்பதுதான். அந்த ஆதிக்க சிந்தனை அதிகமாக உள்ள சிலர் எல்லா சாதிகளிலும், எல்லா மதங்களிலும், எல்லா இனங்களிலும் உள்ளனர்.
இதனால்தான் சட்டசபையை விமர்சனம் செய்யும் கார்ட்டூனால் நமது ஆட்சி கவிழ்ந்துவிடுமோ என்று அச்சப்படுபவர்கள், பத்திரிகை ஆசிரியரைச் சிறையில் அடைக்கிறார்கள். இந்த அச்சமே, ஆட்டோவில் அடியாட்களை அனுப்பத் தூண்டு கிறது. இந்தப் பாதுகாப்பற்ற உணர்வே வழக்குகளாலும் விளம்பர மறுப்புகளாலும் கருத்துச் சுதந்திரத்தின் குரல் வளையை நெரிக்கப் பார்க்கிறது. இதில் ஒப்பீட்டளவில் வேண்டுமானால், ‘அவர்களுக்கு இவர்கள் பரவாயில்லை’ என்று சொல்லிக் கொள்ளலாமே தவிர, அதில் ஒரு பொருளும் இருப்பதாகத் தெரியவில்லை.
ஆனால், ஜனநாயகத்தில் ஒரு கருத்துக்கு எதிர்கருத்து இருந்தால், அதை வெளிப்படுத்த ஆரோக்கியமான வழிமுறைகள் ஏராளமாக உள்ளன. அருண்ஷோரி எழுதிய ஒரு புத்தகத்தில் டாக்டர் அம்பேத்கர் குறித்து மோசமான வரிகள் இடம் பெற்றிருந்தன. மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த தலித் எழுத்தாளரான நாம்தியோ தசால் போன்றவர்கள் அந்த எழுத்தை விமர்சனம் செய்தார்கள்... அருண்ஷோரியின் நோக்கத்தை அம்பலப்படுத்துவதாகவும் விஷமத்தனத்தைத் தோலுரித்துக் காட்டுவதாகவும் சொன் னார்கள். ஆனால், புத்தகத்தைத் தடைசெய்யுமாறு கோர வில்லை. ஜனநாயகத்தின் மீது உண்மையான அக்கறை கொண்டவர்கள் இந்தவிதமான போராட்டத்தையே ஆதரிக் கிறார்கள்.
ஆனால், இங்கே பெரும் பாலான கட்சிகளும் இயக்கங் களும் ஜனநாயகத்தையே தவறாகப் புரிந்து கொண்டிருக்கின்றன. பெரும்பான்மையோருக்குக் கட்டுப்பட்டு சிறுபான்மையினர் வாழ்வதே ஜனநாயகம் என்று நினைக்கிறார்கள். அதாவது பெரும் பான்மை மக்களின் விருப்பத் துக்கு ஏற்ப அமைந்த ஆட்சி, எது செய்தாலும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க் கிறார்கள். இடித்துரைக்கும் எதிர்க்கட்சி இல்லாத ஆளும்கட்சி யாருடைய கெடுதலும் இல்லாமல் தானே அழிந்துபோகும் என்று புரிய மறுக்கிறார்கள். எவ்வளவு குறைந்த ஆதரவு கொண்ட கருத் தாக இருந்தாலும், அதை வெளிப் படுத்துவதற்கான வாய்ப்பு மறுக்கப் பட்டால், அதன்பிறகு கருத்துச் சுதந்திரம் குறித்துப் பல அரசியல் தலைவர்களும் பேசுவதில் எந்த பயனும் இல்லை.
ஒரு சுதந்திரமான ஜனநாயக நாட்டில் அரசமைப்புச் சட்டமே எல்லாவற்றையும் விட உயர் வானது. எனவே சில பண்பாட்டுக் காவலர்கள் வெளியிடும் உத்தரவுகள், மக்களை ஆள்வதற்கு இடம் கொடுத்துவிடக் கூடாது. சிறுபான்மைக் குரலாக எழும் எதிர்ப்புக் கருத்து வெளிப்படு வதற்கும் அதை வெளியிடுபவர்க் கும் பாதுகாப்பளிக்க வேண்டியது அரசின் கடமை. ஏனென்றால், அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு பிரதானமாக அரசுக்குத்தான் இருக்கிறது!


ஒருவேள டி.என்.சேஷன் வந்திருப்பாரோ?
முன்னல்லாம் முகமூடி போடாமத்தான் இப்ப போட்டுறிக்கீங்களா?

இது வாழ்கவா? ஒழிகவா?


சண்டியர் கமல்ஹாசனா இவரா?
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மன்றங்களில் அ.தி.மு.க. வினரின் அடாவடிகள்.இன்றைய செய்திகளில் இருந்து இன்று செய்தித் தாள்கள் முழுதும் அவர்கள் எங்கே எப்படியெல்லாம் பிரச்சனைகளை எழுப்பி மக்கள் தொண்டாற்றினார்கள் என்பது பற்றிய சிறு தொகுப்பு
அடியாள் திராவிட முன்னேற்றக் கழகம்?
ஆனால் இத்தனைக் கூத்தும் வருவார் ஜெயலலிதா வருவார் என்று நினைத்து அவரோ எட்டிக்கூட பார்க்காமல் இருந்துவிட்டார் பாவம்
இட ஒதுக்கீடு சில யோசனைகள்:சமீப காலமாகவே இடஒதுக்கீட்டை ஆதரித்தும் எதிர்த்தும் பல்வேறு மட்டங்களிலும் விவாதங்கள் நடைபெற்று வருவது நாம் அறிந்ததே. அதுவும் வலைப்பூ வல்லுநர்கள் ஏகத்திற்கும் எழுதித்தள்ளிவிட்டு தற்போதுதான் கொஞ்சம் ஓய்ந்திருப்பது போல் தெரிகிறது இந்த நேரத்தில் இப் பதிவு கொஞ்சம் லேட்தான் என்றாலும் லேட்டஸ்டாக இருக்கும் என்பதில் அன்பர்கள் ஐயுரவேண்டாம்.
1. அஸின்
2. நயன் தாரா
3. பத்ம பிரியா
4. பூஜா
5. நமீதாஆஆஆஆ
6. திரிஷா
7. கோபிகா
8. கமலினி முகர்ஜி
9. ஜோதிகா இவர்களுக்கு
95 சதவிகிதத்தை தந்துவிட்டு மீதமுள்ள ஐந்தை வேறு எந்த ஐந்துபேருக்காவது கொடுத்து விட்டால் இட ஒதுக்கீடு சுமுகமாக முடியும். இந்த ஐந்து சதவிகிதத்தில் சிம்ரனுக்கு ஒன்று நிச்சயம்

( இவ் வொதுக்கீடு கமலின் தசாவதாரத்திற்காக )

இதுதானய்யா இப்போது கோலிவுட்டில் ஹாட் டாபிக்

(ஒங்க கோபம் புரியுது என்னங்க பன்றது இந்தமாதிரி ஏதாவது தலைப்பு வச்சாத்தான் முன்னூட்டம் பின்னூட்டமுல்லாம் எழுதுராங்க ... சிரிக்காதீங்க சட்ட மன்ற சண்டியர்கள் அப்பிடீன்னு ஒன்னு எழுதுனன் அதுக்கு மறுமொழி யிட்டவங்க எட்டு பேரு ஆனா ரஜினி வாழ்கன்னு ஒன்னு போட்டேன் அதுக்கு பதில் எழுதினவங்க இருபத்தி ரெண்டு பேரு இந்தமாறி இருக்கு வலைப்பூ நிலவரம்.... ஏதோ கமல்ஹாசன் விருமாண்டில சொன்ன மாறி " ரெக்கையோ கொம்போ அதுபாட்டுக்கு மொளைக்கட்டுமே" இருக்கிர வரைக்குந்தான எல்லாம்.






Test page only

சட்ட சபையில் விஜயகாந்த் நமது கற்பனை.
கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மாணத்தின் மீது பேசிய விஜயகாந்த்:
என்ன 14777 ஒட்டு வித்தியாசத்துல ஜெயிக்க வச்ச விருத்தாசலம் மக்களுக்கும் தமிழ்நாடு முழுக்க 2013455 ஓட்டு போட்டு 8.33 சதவீதம் வாங்கி அங்கீகாரம் கொடுத்த மக்களுக்கும். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்புன்னு சொல்லி என் பேச்சை ஆரம்பிக்கிறேன்.
கவர்னர் அய்யா அவுங்க தமிழ்நாடு முழுக்க அரிசி 2 ரூபாய்க்கு தருவேன்னு சொன்னத வரவேற்கிறேன் ஆனா 24536987பேரு தண்ணியிலாத இருக்கான் அதுபத்தி ஏன் பேசுல? காஷ்மீர்ல123654துப்பாக்கி இருக்கு ஆனா இங்க நம்ம போலீசோ பழைய துப்பாக்கியே வச்சிருக்கு. ஏன் சிந்திக்குனும்.
இல்லன்னா நான் உங்க எல்லாறையும் சிந்திக்க வப்பேன் தப்பு பன்னுன எம்.எல்.ஏ அல்லாரும் மன்னிப்பு கேட்டா உள்ள வருலாம்னு சொன்னாங்க தமிழ்ல எனக்கு புடிக்காத ஒரே வார்த்த மன்னிப்பு.
அன்னைக்கு மட்டும் நான் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டிருந்தா சுத்தி இருக்க செவுத்துக்கல்லாம் நீங்க வெள்ளயடிக்க வேண்டிதிருக்கும். தமிழ் நாட்டில மொத்த தொகுதி 234அதுல நாங்க போட்டியிட்டது 232ஜெயிச்சது ஒன்னு கிடச்ச ஓட்டு 2013455 அதால தான் சொல்லுரன் மக்கள் மாற்றத்த விரும்புராங்க. எந் தொகுதில மொத்தம் 85 கிராமமிருக்கு அங்க இருக்க நியாய வில கடை 35 பள்ளிகூடம்
55 விவசாயி35000டாக்டர் 546ஆறு 7 எனக்கு கெடச்ச ஓட்டு வித்தியாசம் 14777 அங்க இருக்க ஆஸ்பத்திரில மொத்தம் 785 நர்ஸுங்க இருக்காங்க ஆனா டாக்டருங்க 136 நோயாளி 5641 இது எப்படி சரியாகும்?
இவன் தனியாளுன்னு மட்டும் நீங்க கணக்கு போட்டா அது தப்பு மாநிலம் பூரா என் ரசிகர் மன்றம் 28878 மொத்த ரசிகர்கள்8647596 இந்தியாவோட சனத்தொக 110கோடி. நான் காஷ்மீர்ல பாகிஸ்தான் தீவிரவாதியவும் பாத்தன் அஸ்ஸாம்ல உல்பா தீவிரவாதியயும் பாத்தன். தமிழனென்று சொல்லடா தலைனிமிர்ந்து நில்லடாங்கரது எங்க ஸ்லோகன்.
அது மொத்தமா 2011 சட்ட சபைல கேட்கபோவுது அப்ப இந்த கருப்பு எம்ஜார் யாருன்னு மக்கள் காட்டுவாங்க . நேத்து ஜெயலலிதாவுக்கு குடுத்த நேரம் 30 நிமிசம் ஆனா எனக்கு குடுத்த நேரம் 15 நிமிசம். இது பத்தாது....என்ன இன்னும் பேச விடனும்... என்று பேசிக்கொண்டே போகிறார்
(அதற்குள் புது இயக்குனர் யாரோ கதை சொல்ல வருவதாக சுதீஷிடம் இருந்து போன் வரவே கிளம்பி போய்விடுகிறார்)
(. அதன் பின் கருணாநிதி பேச வருகிறார்:)
இங்கே பேசிய தம்பீ விஜி ஒன்றை சொன்னார் தமிழ்நாட்டில் மொத்த ரசிகர்கள் அவருக்கு 8647596 என்று ஆனால் உண்மை அதுவல்ல-864796 இதுதான் உண்மை (ஒருசீட்டை எடுத்து காட்டுகிறார்), இது அவரின் ரசிகர் மன்ற பொருப்பாளர் தந்த அறிக்கை. அப்புறம் நேரம் போதாது என்று சொன்னார் இவருக்கே நேரம் ஒதுக்கிவிட்டால் கழகக் கண்மணிகள் பேச நேரம் கிடைக்காது என்றாலும் சபாநாயகரிடம் இது குறித்து கலந்து பேசி ஆவன செய்யப்படும்.
நேற்று ஏதோ தனியாக வந்து வென்றுவிட்டதாக அம்மையார் சொல்கிறார் ஆனால் தனியாக இருப்போரிடம் எங்கள் வீரத்தை காட்டுவது அழகல்ல ஒரு முன்னாள் முதல்வர் இப்படி வெளியே பேசுவது நாகரீகமல்ல...அது திராவிட பரம்பரையின் அழகுமல்ல. " போருக்கு புறப்படடா தம்பீ என்று அன்று அண்ணா சொன்னார் இப்போது இந்த அண்ணன் சொன்னால் கழகத்தின் உடன்பிறப்புக்கள் பொங்கியெழுவார்கள்
எதிரிகளின் கூட்டம் காணாமல் போய்விடும்
ஆனால் பகுத்தரிவு பகலவனும் அண்ணாவும் சொன்னது அதுவல்ல
கடமை
கண்ணியம்
கட்டுப்பாடு
அதுவே கழகத்தின் மூச்சு இப்படி.........................


(பேசிக்கொண்டே போகிறார் அதற்குள் ஜெயலலிதா இல்லாததை தெரிந்துகொண்ட பாண்டுரங்கணும் சேகர் பாபுவும் பின்பக்க கதவுவழியாக உள்ளே குதிக்க ரகளை ஆரம்பமாகிறது.

(இப்படி எதுவும் நடந்துவிடக்கூடாது என்பதே அனைவரின் விருப்பமும்.... பார்ப்போம்)

தோற்ப்பது எங்களுக்கு புதிதல்ல என்று ம.தி.மு.க கொள்கை(?) பரப்புச் செயலாளர் திரு நாஞ்சில் சம்பத் பொதுக்கூட்டத்தில் பேசியுள்ளார் அதற்கு நம்ம கமெண்டு

நா.ச: தேர்தலில் தோற்றுப்போவது எங்களுக்கு புதிதல்ல மக்களை மீண்டும் சந்திப்போம்( ஆமாம்யா இப்பிடியே பேசிக்கிட்டுருந்தா இப்ப கிடச்சதகூட கோட்ட வுட்டுறுவ)

நா.ச:ஆனால் அதிமுக தோற்றுப்போனதுதான் கவலையாக இருக்கிறது( வைகோ கொஞ்சம் பாத்துக்குங்க அம்மா வாழ்கனுட்டு போயிட போறார்)

நா.ச: எங்கள் வாக்குறுதிகள் நிராகரிக்கப்பட வில்லை பத்திரிகை பணபலம் தேசிய தலைவர்களால் தோற்றுப்போனோம்(ஒருவேள சோனியாம்மாவ சொல்றாறோ? அப்பவும் குமுதம் தினமலர் தினத்தந்தி இந்து லாம் உங்களுக்கு சப்போர்டுதானப்பு?)

நா.ச: எங்களை மத்திய கூட்டணியில் இருந்து விலக சொன்னார்கள் மறுத்துவிட்டோம். என்னிடம் கேட்டார்கள் நான் அம்மாவிடம் கேட்டேன் அவர்கள் விலகவேண்டாம் என்று கூறியதால் விலகவில்லை( வைகோ நீங்க கொஞ்சம் கவனமாத்தேன் இருக்குனும் கிளிக்கு ரெக்க மொளக்குது)

நா.ச: இனி ம.தி.மு.க வுக்கு மந்திரி பதவி கேட்போம் (ஆமா இரண்டு வருஷமானத்துக்கு பத்திரிக கேட்டே குடுக்கல எந்திரிங்கறாங்க இதுல மந்திரி போய்யா யோவ்)

நா.ச: சபையில் இருந்து வெளியேற்றிவிட்டு மன்னிப்பு கேட்டால் உள்ளே விடுவோம் என்கிறார்கள் யாரிடம் கருணாநிதியிடமா ஆவுடையப்பனிடமா (யாருகிட்டன்னு சொன்னா கேப்பீங்களா?)

நா.ச:அதிமுக காரன் ஒருநாளும் மண்ணிப்பு கேட்க மாட்டான்(மன்னிக்க தெரிஞ்சவன் மனுசன் மன்னிப்பு கேட்க தெரிஞ்சவன் பெரியமனுசன் - விருமாண்டி)

நா.ச:தோல்விய தாங்க முடியாமல் எழுபத்து நாலு அதிமுக காரன் தற்கொல பண்ணிகிட்டான் இதுமாறி ஒரு கட்சி ஒலகத்துல உண்டா( இல்லங்க ஆனா இப்பிடியே போனா அந்த கட்சியே இருக்காதேன்னு அம்மா பொலம்புராங்களாம் தெரியுமா?)

நா.ச: திமுக வுக்கு எதிர்கட்சியாக நாங்கள் இருக்கிறோம் ( அப்ப அதிமுக? ஓகோ புரிது புரிது வைகோ நாஞ்சொன்னது சரிதான் புலி காட்டவுட்டு ஊட்டுக்கு போவுது பாத்து கட்டி போடுங்க)



ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!ரஜினி வாழ்க!

என்னடான்னு கொழம்புறீங்களா? இன்னுங் கொஞ்சம் படிங்களேன்

என் தமிழ்மன பகுதியில் மறுமொழி மட்டுறுத்தல் தொடர்பாக ஒரு உதவி
தமிழ்மனம் கூகிள் குழுமத்தில் கேட்டிருந்த கேள்விக்கு ஒரு அன்பர் அனுப்பியிருந்த பதில் இதோ :
பெரியசாமி மகேந்திரன்
உங்கள் பதிவு தெரியாதற்கு காரணம் நீங்கள் ரஜினியை திட்டி பதிவு போட்டதுதான்."ரஜினி வாழ்க" என நூறு தரம் இம்போசிஷன் எழுதவும். எழுதிவிட்டு கீழ்க்கண்ட சுட்டிக்கு சென்று இதை காப்பி பேஸ்ட் செய்து உங்கள் வலைபதிவின் முகவரியை தந்து பின்னூட்டத்தில் இடவும்.விரைவில் நடவடிக்கை எடுப்பார்கள்


ஆகா! நம்மாளுங்க எப்பிடில்லாம் திங்க் பன்றாங்கப்பா நெசமாருக்குமான்னு யாராச்சும் தெரிஞ்சா நீங்களும் மறுமொழியிடுங்கப்பா
இங்கே அந்த பதில் கிடக்கும் போய்பாருங்க

சமீபத்தில் வடசென்னையில் ஒரு பள்ளியின்
20 ஆசிரியர்களைச் சந்தித்து அவர்களோடு உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. எத்தனையோ மேல்தட்டுப் பள்ளிகளின் ஆசிரியர்களை விட அவர்கள் மாணவர்களிடமும் சமூகத்திடமும் கரிசனம் அதிகம் உடையவர்களாக இருந்தார்கள்.
அதிலும் அங்கு இருந்த ஆசிரியைகளிடமிருந்த தன்னம்பிக்கையும் சுயமரியாதையும் அவர்களை நிமிர்ந்து பார்க்கவைத்தன.
இத்தனை இருந்தும் அவர்கள் அனைவரும் சமூக நீதி என்று வரும்போது ஒருமித்த கருத்தினைக் கொண்டிருந்தனர்: இந்தியா சுதந்திரம் அடைந்து

50 ஆண்டுக் காலம் ஆகியும் இன்னும் ஏன் இந்த இட ஒதுக்கீடு? சட்டத்தின் முன் எல்லோருக்கும் சம உரிமையும் சம வாய்ப்பும் தரப்பட வேண்டும். அப்படி இருக்கும்போது சிலருக்கு மட்டும் சில சலுகைகள் அளிக்கப்படுவது எப்படி நியாயமாகும்? முன் ஒரு காலத்தில் ஒடுக்கப்பட்டவர்கள் என்பதால் தாழ்த்தப்பட்ட மக்கள் இன்று எங்களது வாய்ப்புகளைத் தட்டிப் பறிப்பது எப்படி நியாயமாகும்? இப்படி இட ஒதுக்கீடு செய்து அந்தச் சலுகையின் மூலம் வாய்ப்பு பெறும் ஒரு மாணவனிடம், அல்லது வேலையாளிடம் எப்படித் தகுதியை எதிர்பார்க்க முடியும்?
இவர்களை மட்டுமின்றி படித்த மத்திய தர மற்றும் மேட்டுக் குடியினரை அலைக்கழிக்கும் இந்தக் கேள்விகள் அவர்களை அறியாமல் அவர்களுக்குள் கோபத்தையும் காழ்ப்புணர்ச்சியையும் உருவாக்கியிருக்கின்றன.
நான் சந்திக்கும் பல கல்லூரி மாணவர்களிடம் இதே கோபத்தைக் காண முடிகிறது. இந்த மாணவர்களில் பலருக்கு இந்தியா ஓர் ஏழை நாடு என்பதைத் தவிர தங்களைச் சுற்றியுள்ள சமூகத்தின் நிதர்சனங்கள் எதுவும் தெரியாது. ஆனால் தங்கள் வாய்ப்பும் எதிர்காலமும் தட்டிப் பறிக்கப்படுவதாக அவர்களுக்குள் ஊட்டப்பட்டிருக்கும் தீ கவலைக்குரியது.
உண்மையில் விசாரித்துப் பார்த்தால் மேல் ஜாதியினருக்கும் பிற்படுத்தப்பட்ட ஜாதி, தலித் மாணவர்களுக்கும் அதிகம் மதிப்பெண்களிலோ தகுதிகளிலோ வித்தியாசம் இருப்பதில்லை. ஆனால் அப்படிப்பட்ட பிரமை மக்களிடையே மிக சாமர்த்தியமாக உருவாக்கப்பட்டிருக்குகிறது.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் செலுத்தப்பட்டுவரும் ஒரு ஆதிக்கத்தை

50 ஆண்டுகள், அதுவும் இந்தியா போன்ற ஒரு நாட்டில் சீர்செய்துவிட முடியும் என்பது அதீத எதிர்பார்ப்பு. அதுவும் அடித்தட்டு மக்களுக்கு அடிப்படை வாழும் வசதிகளையும் தரமான கல்வி வாய்ப்புகளையும் உருவாக்காத சூழ்நிலையில் இப்படிப்பட்ட குற்றச்சாட்டுகளில் எந்தவித நியாயமும் இருக்க முடியாது. எல்லாவற்றையும் விட இட ஒதுக்கீட்டால் பயன்பெறும் பிற்படுத்தப்பட்ட ஜாதியினர் கூட ஏதோ தங்களது வாய்ப்புகள் தலித் மக்களால் தட்டிப் பறிக்கப்படுவதாகப் புலம்புகிறார்கள்.
சினிமா, பத்திரிகைகள் போன்ற வெகுஜன ஊடகங்கள் இட ஒதுக்கீட்டிற்கு எதிரான கருத்துகளை மிக சாமர்த்தியமாகப் பரப்பிவருகின்றன.
'ஓரே ஒரு கிராமத்திலே' என்ற படம் பத்திரிகைகளில், அதுவும் பொதுவாகத் தமிழைக் கண்டுகொள்ளாத ஆங்கிலப் பத்திரிகைகளால் கொண்டாடப்பட்டதை நாம் மறந்துவிட முடியாது. சங்கரின் 'ஜென்டில்மேன்' என்ற வெற்றி விழாப் படம் இட ஒதுக்கீட்டிற்கு எதிரான கோஷத்தோடுதான் தொடங்குகிறது.
தாழ்த்தப்பட்ட மக்கள்மீது சமூகம் கட்டவிழ்த்துவிடும் அடக்குமுறையும் வன்முறையும் எப்பொழுதாவது நடைபெறும் அத்துமீறல்களாகவே பார்க்கப்படுகின்றன. இப்படிச் சமூகத்தின் ஒரு முக்கியமான சிக்கலை விடுவிக்கவோ தெளிவுபடுத்திச் சீர்செய்யவோ ஊடகங்களும் அரசியல் இயக்கங்களும் முன் வராதது வியப்பளிக்கிறது. சமூகச் சீர்திருத்தங்களில் உள்ள ஓட்டைகளை அடைக்காமல் அவற்றைப் பெரிதாக்குவதா அறிவுஜீவித்தனம்?











நன்றி- நக்கீரன்


சட்ட சபையில் க.வும் ஜெ.வும்
காலை சட்ட மன்றம் வந்த ஜெ நேராக சென்று கையொப்பம் இட்டு விட்டு சேகர்பாபு மற்றும் பாண்டு ரங்கண் இருவரையும் வரச்சொல்லி அனுப்புகிறார்.

ஜெ: என்னய்யா நேத்து நான் பேசுனத பாத்தீங்களா?

சேகர் பாபு: சரிங்கம்மா

பா.ரங்கண்: சரிங்கம்மா

ஜெ: சரி சரி இந்த ஒ.பி ய வரச்சொல்லுங்க

இருவரும்: சரிங்கம்மா!

பா.ர: (வழக்கம்போல் வழியில் கிடக்கும் நாற்காலியை தாண்டி ஓடுகிறார்)

தனது சக எம்.எல்.ஏக்களுடன் உம் மென்று இருக்கும் ஓ.பி.யிடம்

பா.ர: அண்ணே மோசம் போச்சுண்ணே

ஓ.பி: என்னய்யா?

பா.ர: அம்மா அம்மா....

ஓ.பி: அம்மாவுக்கு என்னாய்யா?

பா.ர: ஒங்கள வரச்சொன்னாங்க(சொல்லி முடிப்பதற்குள் முகம் கருக்க எழுந்து பதரி கும்பிட்ட படியே வெளியேருகிறார் ஓ.பி)

ஓ.பி: அம்மா நீங்க வரச்சொன்னதா....

ஜெ: ஏன் நான் வரச்சொன்னாதான் வருவீங்களா

ஓ.பி: இல்லீங்க

ஜெ: சரி சரி நல்லா சாப்டீங்களா( திரு திருவென்று விழிக்கிறார்)

ஓ.பி: (மனசுக்குள்) ஒருவேள நம்ம முதல்வரா இருக்க குள்ள சாப்டத பத்தி நேத்து எவனும் கேட்ருப்பானா?)

ஓ.பி: இல்லீங்க

ஜெ: இல்லயா.... அதான் முந்தானேத்து நம்ம ஆளுங்க எல்லாரும் நல்லா பெஞ்சு மேல ஏரி நின்னு கத்தகுள்ள நீங்க சும்மா இருந்தீங்க.

ஓ.பி: இல்லம்மா அப்பிடி இல்லம்மா நான் ஒரு மு.முதல்வர் நானே எப்பிடி.....(இழுக்கிறார்)

ஜெ: சத்தமாக... என்னா நெனச்சுகிட்டிருக்கீங்க.. அப்ப நீங்க முதல்வரா இருந்தீங்களா நானா?

ஓ.பி: (உடனே மண்டியிட்டு) தெய்வமே வாய்தவறி வந்துடுச்சு ம்மா......(அழுகிறார்)

ஜெ: சரி சரி நல்லா சாப்பிடுங்க நல்லா சத்தமா பேசனும்மில்ல நேத்து நான் பேசுனத பாத்தீங்களா?

ஓ.பி: இல்லம்மா அதுவந்து நம்ம வீட்ல சன் டிவி இல்லம்மா நம்ம டிவில காட்டுலங்கம்மா...
ஜெ: பரவால்ல இனிமே நீங்களும் சன் டிவி பாருங்க நானே இப்ப சகோதரி ராதிகாவோட செல்விதான் ரசிச்சு பாக்குறன்

ஓ.பி: மகிழ்ச்சியாக .... ஆமாங்கம்மா அதுல தாமர மறுபடியும் ஜி.ஜே வ சேத்துக்குவாங்களா? பாவம்மா அவரு

ஜெ: சன்டிவி இல்லன்னு சொன்னீங்க?

ஓ.பி:( ஆஹா வாய்தவறி சொல்லிபுட்டமா?) இல்லம்மா பேப்பர்ல பாத்தன்

ஜெ: இதெல்லாம் பாருங்க நான் பேசுனத பாக்கல ம்?

ஜெ: நேத்து நான் கேட்ட கேள்விய பாத்து அந்த மோசக்கார கருணாநிதி வாயடச்சு போனாரு நல்ல வேள நேத்து பட்ஜெட் இல்ல...

ஓ.பி: (கையில் இருக்கும் பைலை மறைத்து வைக்கிறார்)

ஜெ: சரி சரி போய் ஒரு லெட்டர் எழுதி கொண்டுவாங்க..

ஓ.பி: (வெளியேருகிறார்)

சிறிது நேரத்தில் திரும்பி வந்து..
ஓ.பி: அம்மா

ஜெ: ஆச்சா? (கடிதத்தை வாங்கி கடுப்பாகிறார்) என்னாய்யா இது?

ஓ.பி: ராஜினாமாங்க..

ஜெ: (மனசுக்குள்) நம்மாளுங்க லெட்டர்னாவே ராஜினாமா லெட்டர்தான்யா எழுதுரான் ...

ஜெ: இல்ல ஓ.பி. நீங்க முப்பதாம் தேதி பேசலில்ல அந்த நேரத்த எனக்கு தரும்படி சபாநாயகருக்கு ஒரு கடிதம் வேனும்..

ஓ.பி: சரிங்கம்மா..
இதற்குள் சபாநாயகரும் முதல்வரும் வந்து விட்டதாக தகவல் வரவே சபைக்குள் நுழைகிறார் ஜெ.

சபா: (திருக்குறள் வாசிக்கிறார்) பகல்வெல்லும் கூகையக் காக்கை இகல்வெல்லும் வேந்தர்க்கு வேண்டும் பொழுது

ஜெ: நான் இப்போது பேச அனுமதி வேண்டும்.

சபா: உங்கள் நேரம் வரும் போது பேசலாம். உட்காருங்கள்

ஜெ: (மனசுக்குள்) அதுக்கு அஞ்சு வருஷமில்ல ஆகும்..

சபா: நீங்கள் இப்போது உட்காருங்கள்

ஜெ: சரிய்யா..எனக்கு தெரியும்யா (அமருகிறார்)(அவை குறிப்பில் இருந்து நீக்கப்படுகிறது)

உடனே.. முதல்வர் எழுந்து

மு.க: ஒரு முன்னாள் முதல்வர் அவை தலைவரை பார்த்து சரிய்யா என்று சொல்வது அழகல்ல..

எம்.எல்.ஏக்கள் அனைவரும் மேசையை பலமாக தட்டுகின்றனர்

ஜெ: ஒரு முன்னாள் முதல்வர் சரியில்லை என்று இன்னாள் முதல்வர் கூறுவதை கேட்டு சபா அவர்கள் எதுவும் சொல்லாமல் இருப்பது சனநாயக படுகொலை

சபா: நீங்க உட்காருங்க.... இப்போது கேள்வி நேரம் தொடங்குகிறது
அன்பழகன்: கவர்னர் உரைமீதான எனது விவாதம்....

அன்பு: கவர்னர் அவர்கள் இங்கே சட்ட மன்றம் வந்த போது தனது செல்போன் உரையை விட்டு சென்றுவிட்டார் எனவே...

ஜெ: இது இந்த சபைக்கு தேவயில்லாதது. எனக்கு ஒரு சந்தேகம் உள்ளது

சபா: கேளுங்கள்

ஜெ: கவர்னர் உரையை மறந்து விட்டாரா அல்லது யாரும் திருடி விட்டார்களா?

மு.க: திருடியிருக்க வாய்ப்பில்லை காரணம் கவர்னர் உரையன்று அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் சபையில் இல்லை

ஜெ: கடுப்பாகிறார்

ஜெ: முதல்வர் சொல்வதை பார்த்தால் என்னவோ அதிமுகவினர் திருடர்கள் என்பதுபோல் இருக்கிறது நீங்கள்தான் ஊழல் செய்வதில் விஞ்ஞானிகள்

சபா: இது அவைகுறிப்பில் இருந்து நீக்கப் படுகிறது

ஆ.வீ: கலர்.டி வி ஊழல் செய்தது நீங்களா நாங்களா?

ஜெ: இது தேவையில்லாதது( என்னது தேவையில்லாத மாட்டிகிட்டமே ஆளாளுக்கு கேள்வி கேட்கறான்?)

ஜெ: எனக்கு பேச அனுமதி தராத சபாவை கண்டித்து வெளி நடப்பு செய்கிறேன் (வெளியேறுகிறார்)
லாபியில் இருக்கும் பத்திரிகையாளர்களிடம்

ஜெ: எனக்கு பேசவே அனுமதி தரவில்லை என்னை எல்லோரும் கேள்வி கேட்டார்கள் ஆனால் பதில் சொல்ல அனுமதிக்க வில்லைஇந்த ஆட்சி கவிழ்ந்துவிடும் எம்ஜியார் வாழ்க என்றபடி வெளியேறுகிறார். இது கேட்டதும் சேகர் பாபு பின்பக்க கதவு வழியாக சபைக்குள் குதிக்கிறார்

அரியலுõர்
நகர புறவழி சாலைகள் ரூ.
11 கோடியில் பணிகள் துவக்கம்

அரியலுõர்: அரியலுõர் நகருக்கான புறவழிச்சாலைகள் அமைக்கும் பணி ரூ.

11.40 கோடியில் துவங்கியுள்ளது.
அரியலுõரிலிருந்து செந்துறை, பொன்பரப்பி வழியாக ஜெயங்கொண்டம் வரையிலான

45 கி.மீ., துõர சாலையை அகலபடுத்தி நுõறு அடிரோடு அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டது.
தமிழ்நாடு மேம்பாட்டு நிறுவனம் சார்பில்

65 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்த திட்டமிடப்பட்டு, நில ஆர்ஜித பணிகள் கடந்த நான்கு ஆண்டுகளாக நடந்தது.
அதனை தொடர்ந்து அரியலுõர்செந்துறை சாலையில் நுõறு அடிரோடு அமைப்பதற்காக சாலை அகலப்படுத்தும் பணி இப்போது துவங்கியுள்ளது. அதேபோல

11 கோடியே
40 லட்சம் ரூபாய் மதிப்பில் அரியலுõர் நகருக்கான புறவழிச் சாலை அமைக்கும் பணியும் துவங்கியுள்ளது.
அரியலுõர்பெரம்பலுõர் சாலையில் அல்லிநகரத்தில் துவங்கி, மகாலிங்கபுரம் ரயில்வேகேட், செந்துறை ரோடு, கல்லங்குறிச்சி ரோடு, ஜெயங்கொண்டம் ரோடு, பொய்யூர் ரோடு ஆகியவற்றை கடந்து திருச்சி ரோடு வரையிலான ஏழரை கி.மீ., துõரத்துக்கு 120 அடி அகலம் கொண்ட புறவழிச்சாலை அமைக்கும் பணிகளும் துவங்கியுள்ளது.
மேற்கண்ட அரியலுõர் புறவழிச்சாலை பணிகள் முடிந்த பிறகு அரியலுõர் வழியாக சிமென்ட் ஆலைகளுக்கு செல்லும் லாரிகளால், அரியலுõர் நகரில் ஏற்படும் போக்குவரத்து தவிர்க்கப்படும் என்று தெரிகிறது.

கலைஞர் கவிதை



பதவி பெறும் வாய்ப்பு கிடைக்காத ஆத்திரத்தில்
பதற்றமுற்று; பால் குடித்த மார்பை அறுப்பதுபோல்;
பதுங்கியிருந்து பச்சைத்துரோகம் செய்பவர்கள்
பணமலைக்குள் மூச்சு முட்ட சிக்கியவர்கள்;
நல்லவர் போல நடித்து நஞ்சு கக்கும் நாகப் பாம்புகள்; எத்துணை
வல்லவராயிருப்பினும் வெளியேற்றப்பட வேண்டியவரே ஆவர்!
எவனாயினும் அவன் எட்டப்பன் எடுத்த மறு உருவம் எனில்;
``எமனா’’வான் நம்மியக்கத்திற்கெனத் தெளிவடைந்திடுக!
எத்தனையோ லட்சம் என் உடன்பிறப்புகள் என்புதோலுடன்
ரத்தம் சதை அனைத்தும் வழங்கி இயக்கம் காத்திடும்போது;
பித்தர்களாய் அவர்களை நினைத்து, எத்தர்களாய் வாழ்வு நடாத்திட
புத்தரைப் போல் தம்மைப் பாவித்துக் கொண்டோர்
பத்தரை மாற்றுத் தங்கமெனப் பாராட்டப்படுவரோ; இனி மேலும்?
பட்ட பின்பும் புத்தி வரவில்லையென்றால் கெட்டொழிந்து போய்விடுமே;
நடவடிக்கை யெனும் கணை தொடுத்தால் தான்;
சடசடவென முறியும் சதிகாரர் திட்டங்கள்!
முடமாகிப் போக விடமாட்டோம்; முன்னேற்றக் கழகத்தை!
முன்னர் நமையழிக்க முற்பட்டோர்தான் மூளியாகிப் போனார் காண்!
அதனாலே சதி வேலை கண்ட இடத்து அதனைச் சாய்ப்போம்
துரோகத்தை அது தொடங்கும் போதே துடைத்தெறிவோம்!
உடன்பிறப்புகள் நாமெல்லோரும் ஒரு தாய் வயிற்றில் பிறக்க
இடம் தராது தாயின் வயிறு என்ற காரணத்தால்தான்;
தனித் தனி தாய்களின் வயிற்றில் உதித்துப் பிறந்தோம் - என்று
கனிச்சாறு கலந்த மொழியில் சொன்னாரே அண்ணா; அன்று!
விஷம் ஒரு துளி தானே என்று, அது பாலில் கலப்பதை
வேடிக்கை பார்க்க முடியுமா நம்மால்?
கலந்து விடாமல் கவனமாய்க் கண்காணிப்போம் -
கலந்துவிட்டாலோ; கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுவோம்!
‘‘ம்ம்ம்... எர்ணாகுளத்தில் நான் எல்.கே.ஜி. படிச்சுட்டிருக்கும் போது, திடீர்னு ஒரு பையன் ஒரு சின்ன துண்டுச் சீட்டை என் மேல வீசினான். பிரிச்சுப் பார்த்தா... அதில் ஐ லவ் யூ! ‘ஓ’னு அழுது, ஆர்ப்பாட்டம் பண்ணி, அங்கேயே அந்தப் பையனுக்கு நாலு சாத்து வாங்கிக் கொடுத்தேன்.
எல்.கே.ஜி&யில ஆரம்பிச்ச காதல், இன்னமும் வந்துட்டேதான் இருக்கு. ஒவ்வொண்ணும் ஒவ்வொருவிதத்தில் சுவாரஸ்யம். எனக்கு வர்ற லவ் லெட்டர்ஸை எல்லாம் வாரத்துக்கு ஒரு தடவை அப்பா அம்மா ரெண்டு பேரையும் உட்கார வெச்சு சத்தமா படிச்சுக் காண்பிப்பேன். பாவம்ப்பா பசங்க.’’

(என்ன பன்னுறது இப்பல்லாம் இப்படி தலைப்பு வச்சாத்தான் படிக்கிறாங்க )):
டாக்டரய்யா.. இது நியாயமா?ராமதாஸ§க்கு ஒரு அனல் கடிதம்

ÔÔபாட்டாளி மக்கள் கட்சி.. இன்று பணக்காரக் கட்சியாகிவிட்டது. பா.ம.க. ஆரம்பிக்கப்பட்டபோது, பாட்டாளிகளின் தலைவன் என்று ராமதாஸ் செய்த சத்தியங் களை நம்பி, அந்தக் கட்சியில் சேர்ந்த பாட்டாளி மக்களுக்கு ராமதாஸ் துரோகம் செய்துவிட்டார்..ÕÕ குமுறல்களுடன் பேனா எடுத்தார் பேராசிரியர் தீரன்.
Ôஅன்பிருந்த டாக்டர் ஐயா அவர்களுக்கு,
தீரன் வரையும் மடல்.
நலம்.. பா.ம.க. சார்பில் தங்கள் மகன் டாக்டர் அன்புமணி அவர்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக நியமித்ததால் தாங்களும் நலமாயிருப்பீர்கள். வாழ்த்துக்கள் தெரிவிக்க வேண்டிய நேரம் இது. கூடவே வருத்தமும்!
16.7.89 இந்தத் தேதியை நினைவிருக்கிறதா? ஆம்! பா.ம.க. ஆரம்பிக்கப்பட்ட தினம். சென்னைக் கடற்கரையில் லட்சக்கணக்கான தொண்டர்கள் முன்னிலையில், கட்சியின் நிறுவனராக தாங்கள் செய்த சில சத்தியங்களை, இப்போது வசதியாக மறந்துவிட்டீர்கள். அதை அன்புடன் நினைவுபடுத்த விரும்புகிறேன்.
சமூகநீதி, ஜனநாயகம், சமத்துவம், மனிதநேயம் ஆகியவையே நம் குறிக்கோள். மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, சிறுபான்மை மக்களின் நல்வாழ்வுக்கும் அவர்களின் முன்னேற்றத்துக்கும் பாடுபடுவது என்ற லட்சியத்துடன்தானே பாட்டாளி மக்கள் கட்சியை ஆரம்பித்தோம்.
அன்றைக்கு நீங்கள்.. ‘தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள், பாட்டாளி மக்களை கட்சிக் கொடி கட்டுவதற்கும் போஸ்டர்கள் ஒட்டுவதற்கும் கூட்டம் சேர்க்கவும் வோட்டுப்போடவும் மட்டுமே பயன்படுத்திக் கொள்கிறார்களே தவிர, அவர்களுக்கு எந்தவிதப் பதவியோ, வசதியோ அளிப்பதில்லை. ஆனால், பா.ம.க. இந்த அரசியல் கட்சிகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டு, பாட்டாளி மக்களைக் கைதூக்கிவிடும். நல்ல லட்சிய நோக்கத்துடன் அவர்களுக்குக் கட்சிப் பொறுப்பையும் அரசியல் பதவிகளையும் நிச்சயமாக வழங்கும்’ என்று பேசினீர்கள்.
அதுமட்டுமல்ல, அந்தக் கடற்கரை கூட்டம் உட்பட தொடர்ச்சியாக கிராமம் கிராமமாக மக்களைச் சந்தித்து நீங்கள் பேசியது நினைவிருக்கிறதா? ‘உங்களிடம் டைரி இருந்தால் எழுதிவைத்துக்கொள்ளுங்கள்’ என்று ஒவ்வொரு கூட்டத்திலும் நீங்கள் செய்த ஐந்து சத்தியங் களை நான் டைரியில் எழுதவில்லை. ஒரு நல்ல பா.ம.க. தொண்டனாக என் நெஞ்சில் எழுதிய காரணத்தால் மறக்க முடியாமல் நினைவுபடுத்துகிறேன்.
எந்தக் காலத்திலும் எந்தச் சூழ்நிலையிலும் நானோ, என் குடும்பத்தவர்களோ.. சங்கத்திலோ அல்லது கட்சியிலோ எந்தப் பொறுப்பையும் வகிக்கமாட்டோம். இது மக்களிடம் நீங்கள் செய்த முதல் சத்தியம்.
இரண்டாவது.. என் உயிர்மூச்சு உள்ளவரை நானோ அல்லது என் வாரிசுகளோ எம்.எல்.ஏ., அல்லது எம்.பி. பதவிக்குப் போட்டி போடமாட்டோம். குறிப்பாக, என் கால் செருப்புகூட சட்டமன்றத்திலோ, நாடாளுமன்றத்திலோ படவே படாது.
மூன்றாவது சத்தியம்.. கடைசிவரையில் என் சொந்தச் செலவில்தான் இயக்கப்பணிகளைச் செய்வேனே தவிர, சங்கப் பணத்திலோ, கட்சிப் பணத்திலோ சல்லிக்காசுகூட தொடமாட்டேன்.
நான்காவது சத்தியம்.. நான் மட்டுமல்ல.. என் பிள்ளையோ, மனைவியோ மகளோ யாருமே எந்தப் பதவிக்கும் வரமாட்டார்கள். என் உயிர்மூச்சு உள்ளவரை என் குடும்பத்தாரும் இந்தச் சத்தியத்தைக் காப்பாற்றுவார்கள். பொதுவாழ்வில் கறாராகவும் நேர்மையாகவும் நான் இருப்பேன் என்பதை நீங்கள் நம்புவதற்காக இந்தச் சத்தியம் என்றீர்கள்.
ஐந்தாவது சத்தியம்.. என் கட்சியில் உள்ளவர்கள் அல்லது நானேகூட ஊழல், தவறு செய்தால், மக்கள் மன்றத்தின் முன்னால் பகிரங்கமாக விசாரணை நடத்தி, அதில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் முச்சந்தியில் நிற்க வைத்து என்னை சவுக்கால் அடியுங்கள் என்றீர்கள்.
எல்லோரும் சிலிர்த்துப் போனோம்.. ‘அட, இப்படி ஒரு தலைவனா?’ என நெகிழ்ந்துபோனோம். ஆனால், நடந்தது என்ன? சத்தியம் செய்த நாளில் இருந்து நாட்டு நலனைவிட, கட்சி நலனைவிட, குடும்ப நலனே பெரிது என்று செயல்பட்டு வருகிறீர்கள். இதற்கு உச்சகட்ட எடுத்துக்காட்டுதான்.. சங்கத்துக்கோ, கட்சிக்கோ எந்தக் காலத்திலும் எந்தப் பணியும் செய்யாத அன்புமணியை.. உங்கள் மகன் என்கிற ஒரே தகுதியின் காரணத்தில், கட்சி முடிவு என்ற பெயரில் கட்சியின் அமைப்புச் செயலாளராக்கினீர்கள். அமைச்சரும் ஆக்கியிருக்கிறீர்கள். தாங்கள் ஆரம்பகாலத்தில் செய்த அத்தனை சத்தியங்களையும் சர்க்கரைப் பொங்கலாக்கி உங்கள் குடும்பத்தினருக்குச் சாப்பிட வழங்கிவிட்டீர்களே.. இது எந்த வகையில் நியாயம்?
உங்கள் சத்தியங்களைக் கேட்டு உங்களுக்காகவே உழைத்துத் திரிகிற பா.ம.கவின் அடிமட்டத் தொண்டர்களின் வேதனையை வெளிப்படுத்தக்கூட வாய்ப்பு கிடையாதா?
பா.ம.க\வின் வளர்ச்சிக்காக கொள்கை, லட்சியம் என்று உங்களுக்காக உயிரைவிட்ட இருபத்தைந்து தியாகிகளின் ஆன்மாக்கள்தான் உங்களை மன்னிக்குமா?
இதையெல்லாம்விட உச்சகட்டம்.. தேர்தலிலேயே போட்டியிடாமல் மக்களவை உறுப்பினராகக்கூட இல்லாமல்.. அன்புமணியை கொல்லைப்புற வழியாகஇப்போது காபினெட் அமைச்சராக்கியிருக்கிறீர்களே.. நீங்கள் மக்களிடம் செய்த சத்தியங்கள் என்னாயிற்று? ‘கட்சியின் முடிவு.. அதனால் அன்புமணியை அமைச்சராக் கினேன்’ என்பீர்கள். அன்பு மணியை அமைச்சராக்குங்கள் என்று எந்த பா.ம.க. தொண்டன் கேட்டான்?
தி.மு.கவிலும் அ.தி.மு.கவிலும்கூட ஒரு முடிவுக்குப் பிறகு, ஜனநாயக முறைப்படி நடந்த பொதுக்குழு அல்லது செயற்குழுவைக் கூட்டுவார்கள்.. அன்புமணியை அமைப்புச் செயலாளராக்க, அமைச்சராக்க என்ன கூட்டம் கூட்டினீர்கள்?
1998\ம் வருடத்திலேயே பா.ம.க\வில் ஜனநாயகத்துக்கு பாடை கட்டியாகிவிட்டது. இப்போது கட்சி முடிவு என்பதெல்லாம்.. நீங்களும் உங்கள் குடும்பமும் எடுத்த, எடுக்கிற முடிவுகள்தானே.. இதை ஏன் கட்சிக்காரர்கள் எடுத்த முடிவு.. பா.ம.க. தொண்டன் முடிவு என்று அப்பாவிகள்மீது பாவத்தையும் பழியையும் சுமத்துகிறீர்கள்?
உண்மையிலேயே உங்களுக்கு கட்சியின் மூலம் மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என்ற எண்ணமிருந்தால்.. இப்போதுள்ள ஆறு எம்.பி\க்களில் நிர்வாகத் திறமைமிக்கவர் அல்லது ஏற்கெனவே அமைச்சராக இருந்தவருக்கு அல்லவா அந்த வாய்ப்பை வழங்கியிருக்க வேண்டும்? எல்லோரையும் விட்டு மகனுக்கு காபினெட் அமைச்சர் பதவி வாங்கிக் கொடுத்ததில் மக்கள் சேவை எங்கே இருக்கிறது?
பல்வேறு கிராமங்களில் நீங்கள் மக்கள் முன் செய்த சத்தியங்களை நானும் அருகில் இருந்து செய்து கொண்டவன் என்பதாலேயே என் உள்ளம் கொதிக்கிறது. வேதனையில் வெம்புகிறது.
காந்தி, காமராஜர், பெரியார் போன்ற தலைவர்கள் சத்தியம் செய்ததில்லை. ஆனால், உண்மையாக வாழ்ந்துகாட்டி முன் உதாரணமாக இருந்தார்கள். நீங்கள் காந்தி, காமராஜராக வேண்டாம்.. நீங்கள் செய்த சத்தியங்களை மறந்துவிடா மல் குடும்பத்தைத் தாண்டி, கட்சிக்கும் மக்களுக்கும் ஏதாவது நல்லது செய்ய நினைத்தாலே போதும்.. அதைத்தான் ஒவ்வொரு பா.ம.க. தொண்டனும் எதிர்பார்க்கிறான்.
சிலரை சில நாட்கள் ஏமாற்றலாம்.. பலரை பல நாட்கள் ஏமாற்றலாம். எல்லோரையும் எப்போதும் ஏமாற்றிக் கொண்டிருக்க முடியாது. இதுவும் நீங்கள் சொன்னதுதான்.
இப்படிக்கு,
தீரன்Õ

இந்தோனேஷியாவில் பயங்கர நிலநடுக்கம்:
1500 பேர் பலி ஜகார்த்தா, மே.
27-: இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவுப்பகுதியில் கடந்த
2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட பயங்கர பூகம்பம், அதை தொடர்ந்து ஏற்பட்ட சுனாமி பேரலைகள் பேரழிவை ஏற்படுத்தின. அதன் பிறகு அவ்வப்போது இந்தோனேஷியாவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டு அந்த நாட்டு மக்களை பயமுறுத்தி வந்தது.
ஜாவா தீவுப்பகுதியில் உள்ள யோசியாகார்த்தா பகுதியில் இந்த நிலநடுக்கம் இன்று அதிகாலை

4.23 மணிக்கு ஏற்பட்டது. சக்தி வாய்ந்த இந்த நில நடுக்கம்
6.2 ரிக்டர் அளவாக பதிவானது.
பூகம்பம் தாக்கியதில் கிழக்கு ஜாவா, மத்திய ஜாவா, கேதிரி உள்பட பல்வேறு பகுதிகளில் வீடுகள் இடிந்து தரை மட் டம் ஆனது. வீடுகளில் தூங் கிக்கொண்டிருந்தவர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடினார்கள். வீடுகள், கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி இதுவரை

1500 பேர் பலியானதாக தகவல் கிடைத்துள்ளது. ஆயிரக்கணக்கானவர்கள் காயம் அடைந்து பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சுற்றுலா பயணிகள் தங்கி இருந்த ஓட்டல்களும் இடிந்து விழுந்தன. மின்சார கம்பங்களும் சரிந்து விழுந்தன. இதனால் மின்சாரம் தூண் டிக்கப்பட்டு பல மணி நேரம் அந்த நகரம் இருளில் மூழ்கியது. அந்த நகரில் எங்கு பார்த்தாலும் இடிபாடுகளாக காட்சி அளிக்கின்றன. பூகம்பத்தில் பலியான வர்கள் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித் துள்ளனர்.
இந்த பூகம்பத்தால் சுனாமி அலைகள் ஏற்பட்டதா என்பதை அதிகாரிகள் உறுதி செய்யாவிட்டாலும் யோகியாகார்த்தா மாகாண கடற்கரையில் ராட்சத அலைகள் எழுந்தன. பல இடங்களில் கடல் நீர் ஊருக்குள் புகுந்தன.
பூகம்ப பேரழிவை தொடர்ந்து மீட்பு பணியில் ராணுவம் ஈடுபடுத்தப்பட் டுள்ளது. பல்வேறு பகுதிகளில் இருந்தும் ராணுவத்தை மத்திய ஜாவா பகுதிக்கு விரைய அதிபர் சுசிலோ பம்பாங் உத்தரவிட்டுள்ளார். வெளிநாட்டு உதவியையும் அவர் கேட்டு இருக்கிறார்.

ஜெயலலிதா முடிவு



1. சட்டசபைக்கு நாளை முதல் செல்ல ஜெயலலிதா முடிவு
சென்னை : சட்டசபைக்கு நாளை முதல் செல்ல ஜெயலலிதா முடிவு செய்துள்ளார்.சட்டசபையில் இன்று நடந்த சம்பவங்களை தொடர்ந்து அ.தி.மு.க.,எம்.எல்.ஏ.,கள் இந்த சட்டசபை கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதை தொடர்ந்து சட்டசபைக்கு நாளை முதல் செல்ல ஜெயலலிதா முடிவு செய்துள்ளார்.

இதை எழுதியது யார்?


கிப்பனின் ‘டிக்ளைம் அண்ட் பால் ஆஃப் த ரோமன் எம்ப்பயர்’ என்ற மாபெரும் சரித்திரப் புத்தகத்தைத் தமிழில் யாராவது மொழிபெயர்க்க வேண்டும்என்று எனக்கு ஆசை. பலமுறை நான் சொல்லிப்பார்த்தும், எனது யோசனையே விலை போக வில்லை... அப்புறம்தானே எழுத்து விலை போகும்?!
சரித்திரப் புத்தகத்தை வாரப் பத்திரிகையில் போட்டால் யார் படிப்பார்கள்? என் கிறார்கள். நடிக, நடிகையர்களின் அந்தரங்கங்கள் அம்பலமாவதை ஆவலாகப் படிக்கும் அன்பர்கள், ரோமானிய மன்னர்கள் செய்த காமக் கேளிக்கைகளையும் ஆர்வமாகப் படிக்க மாட்டார்களா?
இதோ, ஒரு xxxxl...
மாமன் டைபீரியஸ் சீசரின் செல்லப் பிள்ளை கையஸ் காலி கூலா, குழந்தையாக இருந்தபோதே போர்முனைக்கு அழைத்துச் செல்லப்பட்டான். கட்டுக் கோப்பான ரோமானியப் படை களமிறங்கும்போது, குழந்தைகளைக்கூடப் போர்முனைக்கு இட்டுச்செல்லும் பாதுகாப்பும் தன்னம்பிக்கையும் அவர்களுக்கு இருந்திருக் கிறது!
சிறுவயதிலேயே போர்வீரர்களை மகிழ்விக்க, சேராத பெரிய போர்க் காலணி களை அணிந்து நடன மாடினான் சிறுவன் காலி. அந்தக் குதூகலமான குழந்தைக்கு லிட்டில் பூட்ஸ் என்பது வீரர்கள் இட்ட செல்லப் பெயர்!
வீரன் டைபீரியஸ் சீசரின் கட்டுப்பாடான வாழ்க்கை ஒழுக்கம், அவரது வயது கூடக் கூட குறைய ஆரம்பித்தது. போர்முனையில் இருந்து திரும்பும்போது எப்போதாவது வேசிகளை நாடிய டைபீரியஸ், பிற்பாடு வேசிகள் விட்டால்தான் போருக்கே வர முடியும் என்ற அளவுக்கு விபசரிக்கலானார் (ஹை! அவர் தப்பைச் சொல்லப்போய், நல்ல வார்த்தை கிடைத்தது, பாருங்கள்!). கர்மமே கண்ணாக இருந்தவர், காமமே கண்ணானார். காலிகூலா
இளம் காலி, மாமன் டைபீரியஸிடம் அரசியலும் வீரமும் மட்டும் கற்க வில்லை... மேற்படி சமாசாரங்களிலும் தேர்ந்த மாணவனானான். உத்தமபுத் திரன் படத்தில், நம்பியார் மாமாவுடன் சேர்ந்து ஒரு சிவாஜி கெட்டுப் போவாரே... அந்தநிழலின் நிஜ உருவம் டைபீரியஸ ம் காலிகூலாவும். இளம் காலிக்குப் பாம்பின் குணாதிச யங்கள் இருந்ததாகப் பிற்பாடு பல விமரிசகர்கள் சொன்னார்கள். ஆனால், மாமாவுக்கு முன்னால் இந்தப் பாம்பும் பால் குடிக்குமா என்பது போலத்தான் இருந்தான் இளம் காலி. ஆனால், பாம்புக்குட்டி குடிக்க, லிட்டர் கணக்கில் காமத்துப்பால், டைபீரியஸ் மாமா வீட்டில் கொட்டிக் கிடந்தது!
ஒரு நாள் தன் சகோதரி அக்ரிபினா அறிய, தனது மெய்க்காப்பாளன் உதவியுடன், உடல்நலம் இல்லாமலிருந்த வயோதிக டைபீரியஸின் முகத்தில் தலையணையை வைத்து அழுத்தி, டைபீரியஸின் மரணத்தையும் ரோமானிய அரசியல் சரித்திரத்தில் புதிய யுகத்தையும் தருவித் தான் காலிகூலா.
இந்தக் கொலை நடந்த சில நாட்களிலேயே சக்கர வர்த்தியானான் காலி. அது மட்டுமல்ல... டைபீரியஸையும் விஞ்சும் காமக்கேடியுமானான். உடன் பிறந்த சகோதரியோடே அவன் உடலுறவு வைத்திருந்த ராஜ ரகசியம் ஊரறிந்த விஷயமாக இருந்தது. ஆண் பெண் (பெரும் அறிவாளிகள் நிறைந்த) மதிப்புக்குரிய செனட் என்று பாரபட்சம் இல்லாமல் அனைவரின் கற்பையும் சூறையாடினான் காலி.
தனது முடிவு நெருங்குவது தெரியாமல், தன்னை வாழும் தெய்வமாக செனட்டைவிட்டுப் பிரஸ்தாபிக்கச் செய்தான். குமைந்துகொண்டிருந்த செனட், ரோமின் அரசியல் எதிர்காலம் கருதி, ஒரு நாள் கடவுள் காலிகூலாவைக் காலி செய்ய முடிவு செய்தது. விசுவாசம் உள்ள வீரர்களை ஏவியது. சமீபத்தில் தனக்கும் தனது சகோதரிக்கும் பிறந்த குழந்தையுடன் மாமன்னர் காலிகூலா கொலோசியம் வந்தருள மனம் கொண்டிருநதார்.
கொலோசியம் பற்றி ஒரு சின்ன குறிப்பு: இன்று பாழாய்க் கிடக்கும் மாபெரும் அரங்கம், அன்று ரோமானிய மன்னர்களும் மக்களும் அடிமைகளின் மரணங்களைக் கண்டுகளிக்கும் குருதிக்களமாக இருந்தது.
மனிதரும் மிருகமும் அல்லது மனிதனும் மனிதனும் யாரேனும் ஒருவர் சாகும்வரை போராடும் வீர விளையாட்டு அது. வீரம் களத்தில் இருப்பவர்களுக்கு, விளையாட்டு வேடிக்கை பார்ப்பவர்களுக்கு. ‘சாகப்போகிறவ ருக்கு வணக்கங்கள்’ என்ற மரியாதை மந்திரத்துடன் ஆட்டம் ஆரம்பமாகும். இந்த உயிர்நீக்கும் ஆட்டம் ஆடும் வீரர்களைத் தயார் செய்ய, தனிப் பள்ளிகளை நிறுவியிருந்தது ரோம். பள்ளியின் மாணவர்கள் பெயர் கிளாடியேட்டர்ஸ்.
இந்த கிளாடியேட்டர்ஸ் தவிர, தேசத் துரோகிகள், புரட்சியாளர்கள் போன்ற உபத்திரவங்களை இல்லாமல் செய்யும் கொலைக்களமாகவும் இருந்தது சர்க்கஸ் மாக்ஸிமஸ்.
புதிதாக உருவான கிறிஸ்துவர்கள் என்ற கூட்டத்தின் அங்கத்தினர்களை அங்கம் கிளாடியேட்டர் படத்தில்...
அங்கமாக மிருகங்கள் பிய்த்துத் தின்னும் காட்சிகளும் நடந்தன. சில உற்சவ நாட்களில், ஒரே நாளில் மூன்று ஷோகூட நடக்கும். அப்படிப்பட்ட தினங்களில் களத்தின் மண், ரத்தம் கலந்து ரத்தச் சகதியாகிவிடும். போராளி கள் வழுக்கி வழுக்கி விழுந்ததால், மோதலில் வன்மம் குறைந்து, காமெடி அதிகம் ஆகிவிட்டதாக மன்னனிடம் மக்கள் குறை கூற... மாமன்னன் பகவான் காலிகூலா உடனே செவிசாய்த் தார்.
ரத்தத்தை உறிஞ்சும் சக்தி ரோமானிய ஈர மண்ணுக்குக் குறைவு. அதனால் ஈரப்பதம் குறைந்த அரேபியப் பாலை வனத்து மணலை அரங்கத்தில் தூவ லாம் என்று மனதில் ஈரமில்லாத அறிஞர்கள் அறிவுரை கூற, ஆவன செய்யக் கட்டளையிட்டார். டன் கணக்கில் மண் கப்பலில் இறக்குமதியாகி, அரேபிய மண் கொலோசியத்தின் களத்தில் தூவப்பட்டது. வழுக்காமல், கொடூரமாகப் போரிட்டு மடிவதை, மன்னனுக்கு நன்றி சொல்லியபடி பார்த்து மகிழ்ந்தார்கள் மக்கள்.
இதுவே பிற்பாடு வன்முறை குறைந்து சர்க்கஸாக, பின் சினிமாவாக உருவெடுத்தது. ‘மாட்னி ஷோ’ என்ற வழக்கு ரோமில், கொலோசியத்தில் மத்தியான ஷோவிலிருந்து துவங்கியது. காலிகூலா இப்படிப்பட்ட கேளிக்கைகளைப் பார்க்கத்தான் தன் சகோதரிக்கும் தனக்கும் பிறந்த குழந்தையுடன் வந்து கொண்டிருந்தான். திடீரென வெளிப்பட்ட வீரர்கள் காலிகூலாவைத் தாக்கினார்கள். வீசப்பட்ட வாள்களுக் குத் தப்ப, காலிகூலா தலையைத் தாழ்த்தினாலும் கழுத்துக்கு வந்த வாள், அவன் தாடையைப் பதம் பார்த்தது.
தவடை (தாவாங்கட்டை) கழண்டு போச்சுனு கேட்டிருப்போமே... அது ஆச்சு, காலிகூலாவுக்கு! தகாத உறவில் பிறந்த அவனது குழந்தையைக் காலைப் பிடித்து, அந்தக் கொலோசியத்தின் கல்தூணில் துணி தோய்ப்பதுபோல் அடித்துக் கொன்றனர் தேச விசுவாசி வீரர்கள் (கம்சன் குழந்தைகளைக் கொன்ற பாணியில்!).
காலிகூலாவின் சகோதரி அக்ரிபினாவை மட்டும் ஏனோ கொல்லவில்லை அவர்கள். பிற்பாடு, இந்தச் சகோதரி அடுத்த சக்ரவர்த்தி க்ளாடியஸ் சீசரை மணந்தாள். மூன்று சீசர்களைத் தன் முந்தானையில் முடிந்து வைத்திருந்தாள் அக்ரிபினா. இவளது மரணமும் காலிகூலாவின் மரணம்போல் கொடூரமாகவும் அதைவிடச் சோகமானதாகவும் இருந்தது. இவள் பெற்ற பிள்ளை மன்னன் நீரோ (ஆமாம்! ரோம் எரிகையில் பிடில் வாசித்தாரே... அவர்தான்!) தன் தாயைக் கொல்ல ஆளை ஏவினான்.
இதெல்லாம் எதுக்குச் சொல்ல வரேன்னா, ஆயிரமாயிரம் ஆண்டுகளாகக் கொஞ்சம்கூடக் கொடூரம் குறையாமல் இன்னும் ரொவாண்டாவில், அயோத்தியாவில், கோத்ராவில், நியூயார்க்கில், ஏன்... காஞ்சிபுரத்தில்கூட வன்முறை பழகி வருகிறோம் நாம்.
கலிங்கத்துப் பரணி படித்தால், நாமும் ரத்தச் சேற்றில் விளையாடிய பிள்ளைகள்தாம் என்பது விளங்கும்.
இந்த வாரம் காதல்... அப்படிங்கிறீங்களா? அதான், காலிகூலாவுக்கும் அவன் சகோதரிக்கும் இருந்ததே... அதுவும் காதல்தானே?
உமக்கும் எனக்கும் பிடிக்கவில்லை என்பதால், அது காதல் இல்லை என்றால், காலிகூலா ஒப்புக்கொள்ள மாட்டார். கடவுள் ஸ்தானத்துக்கு உயர்ந்த மனிதன் இப்படியெல்லாம் எப்படிச் செய்தான்? என்றால்...
இன்றைய செய்திகளைப் படியுங்கள்... சந்திரசாமியைக்கூட CBI விசாரிக்கப் போகிறதாம்!
இன்னொரு கடவுள் கம்பி எண்ண வாய்ப்பிருக்கு.
என்னத்தைச் சொல்ல... போங்கோ! கலி முத்திடுத்து!

இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் போது நாடெங்கும் கலவரம் வெடித்தது.
ஹிட்லரின் நாஜி அரசுக்கு இரண்டு லட்சம் யூதர்களைக் கொல்ல, கிட்டத்தட்ட ஒரு வருடம் வேண்டியிருந்தது.
ஆனால், மூன்றே வாரத்தில் எந்த சர்வாதிகாரியின் ஆணையும் இல்லாமல் இரண்டு லட்சம் இந்தியர்களை இந்தியர் களே கொன்றார்கள்!
கடவுளரின் பெயரால் நடந்தன இந்தக் கொலைகள்.
இதைக் காண நேர்ந்த எந்த மனிதனுக்கும் பெரும் பாதிப்புகள் இருக்கும்! அதுவும், ஒரு நல்ல எழுத்தாளனுக்குக் கேட்கவா வேண்டும்?
46ல் பாதிக்கப் பட்ட எழுத்தாளர் ஒருவரின் சிறுகதைகள், இரண்டு... பானைச் சோற்றுக்குப் பதமாக!
அறியாமையின் நலன்
(ஆங்கில மொழிபெயர்ப்பிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தேன்... உருது தெரியாததால்!)
அந்த ட்ரிகர் அழுத்தப்பட்டதும் புல்லட் சினத்துடன் சுழன்று வெளிப்பட்டது.
அந்த ஜன்னலிலிருந்து எட்டிப் பார்த்த ஆள், இரண்டாய் மடிந்து தலைகுப்புற விழுந்தான் சத்தமின்றி.
அந்த ட்ரிகர் இரண்டாவது முறை அழுத்தப்பட்டது. புல்லட் காற்றைக் கிழித்து விசுக்கெனப் பறந்தது.
ஆட்டுத் தோல் பையில் தண்ணீர் எடுத்து வந்த வடநாட்டான் முகம் மண்ணில் குத்தி விழுந்தான். துளைபட்ட பையின் நீரும் அவன் ரத்தமும் கலந்து, நீண்ட கோடாகத் தெருவைக் கடந்தது.
மூன்றாம் முறை ட்ரிகர் அழுத்தப்பட்ட போது, புல்லட் குறி தவறி மண் சுவரில் புதைந்தது.
நாலாவது, ஒரு கிழவியை வீழ்த்தியது.
ஐந்தும் ஆறும் வீணாயின. யாரும் சாகவில்லை. யாருக்கும் காயம்கூட இல்லை!
துப்பாக்கிக்காரன் எரிச்சலடைந்தான். அப்போது எதிர்பாராமல் தெருவில் ஓடிவந்த அந்தக் குழந்தை, அவன் கண்ணில் பட்டது.
துப்பாக்கி வீரன் துப்பாக்கியை உயர்த் திக் குழந்தையைக் குறிவைத்தான். என்னடா செய்யறே? என்றான் அவன் நண்பன்.
ஏன்?
துப்பாக்கியில் தோட்டா தீர்ந்து போச்சே!
சும்மார்றா முட்டாள்...அது குழந்தைக்குத் தெரியவா போகுது?
தூக்கு
(இது நினைவில் பதிந்த கதையின் மொழிபெயர்ப்பு. வரிக்கு வரி மொழிபெயர்த்ததல்ல!)
கரண்ட் எப்போதாவது வந்துபோகும். ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் தீர்ந்து விட்டன. தையல் போட Ôகேட்கட்Õ (சிணீtரீணீt) கூடத் தீரும் தறுவாய்!
சாயங்காலம்.
அந்த இளம் டாக்டருக்கு, இது முப்பத்தாறாவது மணி நேரம் டியூட்டியில்!
சில பேஷண்ட்டுகள் செத்துப் போவதைச் செய்வதறியாது பார்த்துக் கொண்டிருப்பது, வேலையைவிடச் சோர்வு தரும் விஷயம்.
பெட்ஷீட்டுகளைத் துவைத்துப் போடக்கூட ஆளில்லை. பழைய ரத்தக் கறை படிந்த படுக்கைகளில் புதிய பேஷண்ட்டுகள். ஜன்னலில் கர்ட்டன்ஸ் இல்லை. அதற்குப் பதிலாகப் புடவை களைத் தொங்கவிட்டிருந்தார்கள்.
அசதி, கோபம், பசி... மும்முனைத் தாக்குதலில் தோற்ற டாக்டர், வீட்டுக்குப் போக பையை எடுத்தார். அப்போது “
புதிய பேஷண்ட்டை இரு காந்தி பக்தர்கள் கைத்தாங்கலாக அழைத்துவர, குறுக்கே இருந்த சேரை நகர்த்தி வழி செய்த ஆங்கிலோஇந்திய நர்ஸ் கெஞ்சினாள்.
இன்னொரு கற்பழிப்பு கேஸ்.
இதற்குமுன் வந்த பெண்கள் போலவே வெறித்த பார்வை. முனகல் தாளகதி தவறாமல் மிருதுவாக வெளிப்பட்டபடி இருந்தது.
அவள் பிளவுஸ் கிழிந்து, மார்பகங்கள் தெரிந்தன. கடித்த காயங்கள் பல இடங்களில்... கண்டிப்பாகத் தையல் போடவேண்டிய ஆழக் காயங்கள்!
டாக்டரால் காயத்தைச் சரியாகப் பார்க்க முடியவில்லை.
வெளிச்சமும் குறைவு!
துணைக்கு வந்தவர்கள், கையைப் பிசைந்தபடி டாக்டர் அருகில் நின்றனர்.
ÔÔஇப்படி வெளிச்சத்தை மறைச் சுக்கிட்டு நின்னா, நான் எப்படி என் வேலையைச் செய் வேன்? போங்கய்யா வெளியே!ÕÕ
கூட வந்தவர்கள் புறப்படலா னார்கள்.
திரைச்சீலையைத் தூக்கினால் வெளிச்சம் வர வாய்ப்பு உண்டென எண்ணி, போகிறவர்களிடம் ÔÔஉம்... அப்ப டியே அந்தப் புடவையைக் கொஞ்சம் மேலே தூக்கு!ÕÕ என்றார் டாக்டர்.
சற்றும் எதிர்பாராமல் படுக்கையில் கிடந்த பெண் முனகலை நிறுத்திப் பேசலானாள்...
ÔÔவேணாம்... என்னை அடிக்காதீங்க! இதோ, இதோ... புடவையைத் தூக்கிடறேன்!ÕÕ என்றபடி தனது புடவையைத் தூக்க முயன்றாள்.
ÔÔஐயையே... அது இல்லேம்மா!ÕÕ தடுத்து ஆசுவாசப்படுத்தினாள் நர்ஸ்.
கோபம், அயர்ச்சி, பசி... பாவம், இளம் வயதும் சேர்ந்ததால் டாக்டர் குலுங்கிக் குலுங்கிக் குழந்தை மாதிரி அழ ஆரம்பித்துவிட்டார்!
இந்த இரு சிறுகதைகளில் எத்தனை சதவிகிதம் கற்பனையோ... தெரியாது. 40களில் எழுதப் பட்ட உலகத்தரம் வாய்ந்த கதைகள் எழுதியவர் சதத் ஹஸன் மன்டோ.
மும்பையில் ரத்தமும் சதையுமாக நடமாடிய மனிதர். அதுவும், எங்கள் சினிமா துறையில் என்றதும் முதலில் என்னால் நம்ப முடியவில்லை!
சினிமா எழுத்தாளராக இருந்த திரு.மன்டோ, இந்தியா இருவேறு நாடுகளாகப் பிரிந்தபோது, பாகிஸ்தா னுக்குச் செல்லும் முடிவை எடுத்தவர்.
அங்கு தண்டா கோஷ்ட் (குளிர்ந்த மாமிசம்) என்ற கதையை எழுதியதற்காகக் கைது செய்யப்பட்டவர். ஒரு நாடோடியின் அந்தஸ்துடன் பாகிஸ்தானில் மாண்டவர். நடுநிலை அவரை இந்த அவலநிலைக்கு ஆளாக்கியது.
ஹே ராம் படத்துக்கான ஆராய்ச்சி யில் ஈடுபட்டிருந்தபோது, தாமதமாக எனக்குக் கிடைத்த ஈடில்லா எழுத்தாளர் மன்டோ. எனது மொழிபெயர்ப்பால் காயமுற்றிருந்தால் ஒழிய, உருதுவில் எழுதிய இவரின் கதைகள் உலகத்தரம் வாய்ந்தவையே!
ஹே ராமில், அந்தக் காலகட்டத்தின் உணர்வுகளைக் குறுகிய காலத்தில் எனக்குப் போதித்த குரு சதத் ஹஸன் மன்டோ.
Ôநான் கொஞ்சம் முன்னாடி பிறந் திருந்தால், ஜெயகாந்தனைச் சந்தித்தது போல், சுந்தர ராமசாமியைச் சந்தித்தது போல்... சத்யஜித் ரே, திலீப்குமார் போன் றோரைச் சந்தித்ததுபோல் இவரையும் சந்தித்திருக்கலாமோ?Õ என்ற அசட்டுக் கனவுகள் காண்பதுண்டு நான். கையில் ஒரு பழத்தை வைத்துக் கொண்டு, தட்டில் இருக்கும் பழத்துக்கு அழும் குழந்தைபோல நான். நானும் சில உன்னதமான மனிதர்களின் சகஜீவி என்பதை எப்போதாவது உணராமலா செத்துப் போவேன்?
இப்போது உணர ஆரம்பித்திருக்கிறேன். முழுதும் உணர நேரம் இருப்பதாகத் தோன்றுகிறது! நல்லவற்றை எனக்கு உணர்த்த, நல்ல வாசிப்புள்ள நண்பர்கள் பலர் இருக்கிறார்கள். இன்னும் நான் சந்தித்த விவீறீஷீs திஷீக்ஷீமீனீணீஸீ, யிமீணீஸீ சிறீணீuபீமீ சிணீக்ஷீக்ஷீவீமீக்ஷீ போன்ற ஐரோப்பிய மேதாவிகள் பற்றியும் சொல்லவிருக்கிறேன்.
கவலை வேண்டாம்... அந்த மேதை களுக்கும் காதல் உண்டு. ஆகையால், காதலை உதாசீனப்படுத்திவிட்டு, வெறும் அறிவுப்பூர்வமான விஷயங்களில் நான் திளைப்பதாக நினைத்துவிடாதீர்கள்!
ஈரம் காய்ந்து வறண்டுவிடாமல் இருக்க, அவ்வப்போது காதல், பூடகமான விரும்பும் எல்லாம் சேர்க்காமல் இருப்பேனா? கோடம் பாக்கத்தில் வளர்ந்த பிள்ளையாச்சே நான்! இங்கிதம் தெரிந்த இந்தியன் அல்லவா நான்? கவலை வேண்டாம்!
நிஜத்தைப் பேச வேண்டும். ஆனால், நேரடியாகப் பேசக்கூடாது என்ற சமூக இடக்கரடக்கல் தெரிந்தவன் நான்.
அதென்ன... இடக்கரடக்கல்னா? என்று யாராவது சிலர் கேட்பர் எனும் ஆங்கில வார்த்தைக்கு நிகரான தமிழ் வார்த்தை. இன்னும் சொல்லப்போனால், அதையும் தாண்டி (புனிதமானது) பன்முகம் கொண்ட வார்த்தை!
வெட்கப்படாமல் பத்திரிகையில் பேட்டிகளில், கட்டுரைகளில் உபயோகித்தால் பழக்கமாகிவிடும்!

நன்றி - ஆனந்த விகடன்


வேறு ஒரு கதை விவாதத்தில் பிறந்த கிளைக் கதை இது. இது கிளைகூட இல்லை; வேறு, வேறு விதை.
‘‘விவசாயிகளின் தளம் போல வானம் பார்த்த பூமி இல்லை நமது விளைநிலம்’’ என்றார் கதை விவாதிக்க வந்த ஒரு நண்பர்.
‘‘ஆம்! இது பூமி பார்த்த பூமி’’ என்றேன்.
‘‘சில சமயம் வானமும் பார்க்குமே?” என்று சிரித்தார். ‘‘பார்க்கும், எங்கேயும் பார்க்கும். பார்வைதானே கதையே! என் கோணம், என் கதை.’’
‘‘சரி, கதைக்கு ஒரு துப்பு கொடுங்க, துலக்கறேன்’’ என்றேன்.
‘‘துப்பு என்ன... தலைப்பே தர்றேன்.’’
‘‘ம்...?’’
நான் சற்றும் எதிர்பாராத தலைப்பு தந்தார்.
‘‘நான் கற்பிழந்த நாள்.’’
‘‘ஓ! கதையின் நீளம்?’’
‘‘சிறுசு’’ என்றார்.
‘‘கதாநாயகனா? நாயகியா?’’
‘‘நாயகிதான் யதார்த்தமாய் இருக்குமோ?’’
‘‘உண்மைதான். காலம்?’’
‘‘பகலா, இரவான்னு கேக்கறீங்களா?’’
‘‘இல்லை. நேற்றா, இன்றா, நாளையான்னு கேக்கறேன்?’’
‘‘முந்தானேத்து’’ என்றார் வீம்புக்காக.
சிரித்துவிட்டு, ‘‘பிஷீஷ் ணீதீஷீut முன்பு ஒரு காலத்துல?’’
‘‘கீலீஹ் ஸீஷீt?’’ என்றார் விட்டுக் கொடுப்புடன்.
‘‘உங்க தலைப்புக்கு ஏத்த மாதிரி ஒரு கதைச் சுருக்கம்... ‘சீதையின் வாழ்வில் ஒரு நாள்’ & எப்படி?’’
‘‘அம்மாடியோவ்!’’
‘‘ஏன்?’’
‘‘கீலீஹ் ஸீஷீt?’’
‘‘கலவரம் வர ஒரு கதை காரணமா இருக்கணுமா?’’
‘‘கலவரம் வர நம்மூர்ல காரணம் வேணுமா என்ன?’’ என்றேன்.
‘‘கிரீக்ஷீமீமீபீ. சீதை என்ன சொல்றா? ஏன் அப்படிச் சொல்றா? அவ அப்படிச் சொன்னதுக்கு என்ன ஆதாரம்?’’
‘‘ஓ! கதையின் கால், ரிஷியின் மூலம் எங்கேன்னு கேக்கறீங்க? சொல்றேன்.ஆதாரம் கேட்டீங்கன்னா, கையில ஒண்ணுமில்ல. ஆனா, இது அக்னி சாட்சியா உண்மை.’’
‘‘அப்பிடின்னா?’’
‘‘இது எனக்கு அக்னிதேவன் சொன்ன கதை.’’
‘‘ஓ! சீதை சொல்லவில்லையா?’’ என்றார் சுவாரஸ்யம் இழந்தவராக.
‘‘இல்ல... சீதை எனக்குப் பழக்கமில்லை. ஆனால், அக்னி வேறு விஷயம்.’’
‘‘ஓஹோ! அக்னிதேவன் உங்க நண்பரா?’’
‘‘ஆமாம்! ஆனா, ரொம்ப நெருக்கமில்ல. தூரத்து உறவு. அந்தரங்க ரகசியங்களைப் பகிர்ந்துக்கற அளவுக்கு நட்பு. ஒரு தலைக் காதலர்கள் சங்கத்துல என்னைப் போல் அவரும் சில காலம் உறுப்பினரா இருந்தாரு.’’
‘‘கீஷீஷ்! லீஷீt ரீஷீssவீஜீ?’’
‘‘ழிஷீ, ணீ ஷ்ணீக்ஷீனீ tணீறீமீ’’ என்றேன்.
துவங்கினேன்... ‘‘அக்னி தேவன் சொன்னபடி அதிக புனைவில்லாமல் சொல்றேன்.’’
‘‘ராமன், சீதையின் கற்பைச் சோதிக்க முடிவு செய்த நாள். ராவணன் போரில் செத்துப்போனான். என் போன்ற ஒருதலைக் காதல் ராவணனுக்கும் இருந்தது சீதையின் மேல்’’ என்று கதை சொல்லத் தொடங்கினான் அக்னிதேவன்.
‘‘இரவெல்லாம் அசோக வனத்தில் குளிருக்காக ராவண சேவகிகள் என்னை எண்ணெயூட்டி, மட்டை விறகூட்டி வளர்ப்பர். என் கதகதப்பில் காவலாளிகள் உறங்கினாலும் சீதை உறங்க மாட்டாள். நானும்தான்.
சில சமயம் அனைவரும் உறங்கிய பின் என்னையே வெறித்துப் பார்ப்பாள் சீதை. நான் படபடத்துப் போவேன். சங்கோஜத்தில் நெளிவேன், உறக்கம் இன்றி.
விடிந்ததும் காமுற்ற என் மனதை நனைத்து அவிக்கும் பகலும், காற்றும்!
ஒரு முறை ராவணன் மேல் பொறாமையில், ராவணனின் அரண்மனைக்குத் தூது வந்த ராமதூதன் வாலைப் பிடித்துக்கொண்டு இலங்கையையும் ராவணனையும் அழிக்கக் கூடத் துணிந்தேன். கைகூடவில்லை. வீணாக நிறைய அரக்கு உருகியதுதான் மிச்சம்...’’
‘‘சரி! கதையின் தலைப்புக்குக் காரணமான காரியமென்ன? இது சிறுகதை, ஞாபகமிருக் கட்டும்’’ என்று ஞாபகப் படுத்தினார் நண்பர்.
தடங்கலின் எரிச் சலைக் காட்டாமல் அக்னிதேவன் தொடர்ந்து பேசலானான்...
‘‘காரண காரியம் காதல் தான். சீதையின் கற்புக்கு நானே சாட்சி! ராவணன் அவளைச் சந்தித்த இரவுகளில், நானும் கூடவே இருந்தேன். அந்தத் தூதுவன் கணையாழி கொண்டு வந்து நீட்டியபோது அடி வயிறு பற்றிக் கொழுந்துவிட்டு எரிந்தேன். என்ன பிரயோஜனம்? சீதை கணையாழியை இன்னும் தெளிவாகப் பார்த்தாள்... என் வெளிச்சத்தில்.
சீதை ராவணனோடு மட்டுமல்ல, என்னுடனும் பேச மறுத்தாள். அவள் நல்லவள். ஒரு வார்த்தைகூட என்னுடன் பேசாதவள்.
அன்று ராமன் அவளை ஊரறியச் சோதிக்க முற்பட்டபோதுதான் என்னுடன் முதன்முதலாகப் பேசினாள்.
‘‘ராமனன்றி யாருடனும் சேராதவள், நினையாதவள் இன்று மனமொடிந்தேன்! நிதம் பார்த்து ஏங்கினாயே! காத்துவைத்த இந்தக் கற்பு உனதாகட்டும். எனை ஆட்கொள்’’ என்றாள்.
காதல் ஓர் விநோத நோய். தேரைக்கும் பாறைக்கும் ஏற்பட்ட காதல் போல யாரும் அறியாது நிகழ்ந்த இந்தக் காதல் சங்கமத்தில், என் காமச் சூட்டைவிட காதல் வண்ணம் மேலோங் கியது.
என் முதல் காதல் நாசமாய்ப் போனதே... அதுபோல் இதுவும் ஆகும் என்று தோன்றியது.
அவளை எனதாக்கிக் கொள்ளும் அவசரத்தில், அவளையே கரிக்கிச் சாம்பலாக்கிவிடுவேன் நான். தெரியும் எனக்கு. தோற்ற என் முதல் காதல் தந்த அனுபவம் இது.
‘முதல் காதல் யாருடன்?’ என்று நண்பர் கேள்வியைக் கேட்கும் முன், சுடச்சுட வந்தது பதில்.
‘‘முதல் காதல் காட்டுடன், வனமோகினியுடன். நான் அப்போது மலைமகன். விடலை. என் காதலைச் சொன்னவுடன் வெகுண்டு வெடித்தார் தந்தையார். என்னை வீட்டைவிட்டு வெளியேற்றினார். குழம்பிப் போனேன்.
காதலியைத் தேடிப் போனேன். பல நாள் கனவிலே செய்ததை அன்று நினைவில் செய்தபோது, காதலி கரிந்துபோனாள். என் காதலும்தான்! என் காதல் தோற்ற கோபத்தில் காதல், காமம் என்ற வார்த்தை களைக் கேட்டாலே எரிந்து விழுந்தேன். சிவனின் மகன் மாறன் கரிந்ததும் என்னால் தான். அந்நிலை இன்று இவளுக்கும் ஆகும். தெரியும் எனக்கு. இவளுடன் ஒன்று சேருவதை விட இவளைக் காப்பதே என் கடமை என்றது காதல்.
என் கைக்குள்ளே வந்த சீதையிடமோ குரோதமும் ஆதங்கமுமே தெரிந்தது. மோதியழ ஒரு தோள் நான். அவ்வளவே!
அவள் என் மேல் அன்று பொழிந்தது காதல் மழையல்ல, கருணை மழை! உதட்டளவில் தானமாகக் கொடுத்தாள் காதலை.
‘‘உன்னுடன் வருகிறேன் என்றவளை ஏன் வேண்டாம் என ஒதுக்குகிறாய். ஏற்க என்னை!’’ என்றாள்.
‘‘சீதா! காதல் ஒன்று சேருவதில் மட்டுமே வருமெனில், ராமனின் காதல் இந்நேரம் வெகுவாகக் கூடி இருக்க வேண்டுமே! கூடியபின் குறையும் குணம் உள்ளது காதல்.
என்னருமை சீதா! காமத்தில் நான் குளித்து நனைந்தால், யாருக்கும் இன்றி அவிந்தேபோவேன். நீ அயோனிஜா, மீண்டும் உன் தாய் வீட்டுக்கே போவாய். மற்றவர்போல், கடைசியிலேனும் என் கைவசப்படுவாய் என்ற நம்பிக்கையும் இல்லை எனக்கு.
என்னைப் போல் நீயும் நியதிகளுக்கு அப்பாற்பட்டவள். உன் கற்பும் கலையாமல், நம் காதலும் கரையாமல் இருக்க, நாம் கூடவே கூடாது.
என்னைக் கடந்து செல், உன் சுயநல ராமனிடம்! இந்தக் கூடாத கூடலில், நியதிகளுக்குள் அடங்காத நானே கருத்தரிப்பேன்! நம் காதலின் நினைவாக உன் வடிவில் ஒரு குமாரத்தி யைப் பிரசவிப்பேன்! அவளுக்கு திரௌபதை என்று பெயரிடுவேன். சம்மதமா?’’ என்றேன்.
சீதை என் காதல் கேட்டுக் கண்கலங்கினாள். ‘இத்தகைய காதலை நான் அனுபவித்ததே இல்லை. இத்தகைய ஆணையும் நான் சந்தித்தது இல்லை. இனியும் அது நிகழாது.
உன் இந்த அன்புச் சூட்டில் உன் கை தவழ்ந்து வெளியேறிய பின், உன் நினைவாகவே இருப்பேன். என் கற்பு, ராமன் போன்றவர் வாழும் பிரதேசத்தில் அழுகித்தான் போகும். என் கற்பு உன்னிடமே இருக்கட்டும். அதை, பிறக்கப்போகும் நம் மகள் திரௌபதைக்கு திருமணச் சீராக விட்டுச் செல்கிறேன்’’ எனக் கூறி விடைபெற்றாள்.
அவள் கண்ணீரும் காதலும் என்னை நனைக்க, என் கைகள் தளர்ந்து போயின.
அன்று கைவிட்டுப் போனவள்தான், பிறகு பார்க்கவில்லை. என் மகள் திரௌபதையின் வாழ்வில் இத்தகைய சந்தேகக் கணவர் யாரும் வாய்க்காமல் காப்பேன். கற்பு என்ற சிறையில் சீதைபோல் அவள் சாகாமல் காப்பேன். என் மேல் ஆணை!’’
தன் தலையையே சத்தியத்தின் சாட்சியாக்கினான் அக்னி என்று முடித்து, என் குரலை மாற்றிக்கொண்டு நானானேன்.
விவாதம் தொடர்ந்தது.

நன்றி - ஆனந்த விகடன்


கோபி
பஸ் நிலையத்தில் கணவன்&மனைவி...
‘‘இங்கேயே நில்லு, நம்ம ஊரு பஸ் வந்தா ஏறி எனக்கும் சேர்த்து ஒரு ஸீட் போடு. இதோ வந்துடறேன்...’’
‘‘நீங்க எங்க போறீங்கனு தெரியும், பேசாம நில்லுங்க.’’
‘‘அட, ஒரு பிரண்டு நிக்கிறான்... பார்த்துட்டு வர்றேன்!’’
‘‘இப்படி ஏதாவது ஏடாகூடம் பண்ணுவீங்கனு தெரிஞ்சுதான், உங்க பாக்கெட்ல இருந்த பணத்தை எல்லாம் உருவிட்டேன். காசில்லாம தண்ணியப் போட்டு மாட்டிக்காதீங்க...’’
(சட்டையைத் தொட்டுப்பார்த்துக் கணவர் அதிர்ச்சியாகிறார்)
இடஒதுக்கீடு பற்றி ஜென்ராம்

சதவிகிதம் மட்டுமே சமத்துவமல்ல! இந்திய அரசியலில் சில வார்த்தைகள் மிகுந்த வல்லமை வாய்ந்தவை. அந்த வார்த்தைகள் எப்போதெல்லாம் உச்சரிக்கப்படுகிறதோ அப்போதெல்லாம் பிரச்னைகள் வெடிக்கின்றன. அப்படிப்பட்ட வார்த்தைகளில் ஒன்றுதான் ‘இடஒதுக்கீடு.’ 90&ம் ஆண்டில் இந்த வார்த்தை உச்சரிக்கப்பட்டபோது, நாடு முழுக்க கொந்தளிப்புகள் எழுந்தன. இப்போது மீண்டும் அந்த வார்த்தை உச்சரிக்கப்பட்டிருக்கிறது. கூடவே போராட்டங்களும் கொழுந்துவிட ஆரம்பித்துவிட்டன.
‘உயர்கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 27 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்கப் படும்’ என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் அர்ஜுன் சிங் ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக அறிவித்தார். அதைத் தொடர்ந்து மும்பை மற்றும் டெல்லி நகரங்களில் மருத்துவக் கல்லூரியில் பயிலும் உயர்சாதி மாணவர் களும் டாக்டர்களும் போராட் டத்தில் குதித்துள்ளார்கள்.
1990&ம் வருடம் வி.பி.சிங் மண்டல் கமிஷன் பரிந்துரைகளை நடைமுறைப் படுத்தியபோது எழுந்த மாணவர் போராட்டங் களை இந்தப் போராட்டங்கள் நினைவூட்டுவதாகப் பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் குறிப்பிடு கின்றன. உண்மையில் இந்தப் போராட்டங்கள், 1990&ல் நடந்த நிகழ்ச்சிகள் போன்றவை அல்ல. அப்போது ஆட்சியில் இருந்த வி.பி.சிங் அரசு, அரசுப் பணிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவிகித இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்ற மண்டல் கமிஷன் பரிந்துரையை அமல்செய்யப் போவதாக அதிரடியாக அறிவித்தது. ஆனால், இன்றைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தன்னிச்சையாக எதையும் செய்யவில்லை. கடந்த 2005 டிசம்பர் 21&ம் தேதி நாடாளுமன்றத்தின் மக்களவையிலும் 22&ம் தேதி மாநிலங்களவையிலும் மிகப் பெரும்பான்மையான கட்சிகளின் ஏகோபித்த ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட சட்டத்தையே இப்போது மத்திய அரசு செயல்படுத்த முனைகிறது. இந்தச் சட்டத்துக்குக் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், கடந்த ஜனவரி மாதம் 20&ம் தேதியன்று ஒப்புதல் அளித்துக் கையப்பம் இட்டார். அரசியல் சட்டத்தின் பிரிவு 15&ல் புதிதாக ஒரு விதியைச் சேர்த்ததன் மூலம் அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீட்டுக்கு இந்தச் சட்டம் வழி செய்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அவையில் சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு, அரசு நிர்வாகம் அதை நடைமுறைப்படுத்துவதற்கு முயற்சிகள் எடுக்கத்தானே செய்யும்?
சரி... இந்தச் சட்டத்தை இயற்ற வேண்டிய அவசியம் ஏன் வந்தது என்ற கேள்வி எழக் கூடும். வி.பி.சிங் மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமல்செய்தபோது அதை எதிர்த்தவர்கள் என்ன சொன்னார்கள்? ‘சமூக நீதி காக்கப்பட வேண்டுமென்றால், இட ஒதுக்கீட்டை கல்வி நிறுவனங்களில் இருந்து தொடங்க வேண்டும்’ என்றார்கள். இப்போது அவர்கள், ‘ஆரம்பப் பள்ளிகளில் அடிப்படைக் கல்வி வசதிகளை ஏற்படுத்தாமல் நேரடியாக உயர்கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு செய்வது நியாயமா?’ என்று பேசுகிறார்கள்!
அவர்கள் கூறியது போலவே கல்வியில் இடஒதுக் கீட்டுக்கான முயற்சிகள் முன்பு நடந்தன. ஆனால், சில நீதிமன்றங்கள் அரசு நடத்தும் கல்வி நிறுவனங்களில் மட்டுமே இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த முடியும் என்று தீர்ப்புகள் கூறின. இந்நிலையில் இடஒதுக்கீட்டுக்கு சட்டரீதியிலான பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. எனவேதான் நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டது. காலகாலமாகப் பிற்பட்டுக் கிடக்கும் மாணவர்களின் நலனை முன்னிட்டே இந்த சட்டம் என்பது உண்மை!
சரி, இந்த அறிவிப்பில் அர்ஜுன் சிங் ஏன் அதிக அக்கறை காட்டுகிறார்... ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களுக்கு முன்னதாகவே இதை அறிவிக்க வேண்டிய அவசியம் என்ன... அவரின் செயல்பாட்டில் சுயநலம் இருக்கிறதா... வேறு அரசியல் காரணங்களும் இருக்கக் கூடுமா... இடஒதுக்கீட்டுக்கு எதிரான போராட்டங்கள் 1990&ம் வருடத்தைப் போல் ஏன் தீவிரமாக நடைபெறவில்லை? இதுபோன்ற பல கேள்விகள் மக்கள் மத்தியில் எழுகின்றன.
அர்ஜுன் சிங், அடிப்படையில் நேரு குடும்ப விசுவாசி. 1991 மே மாதம் 21&ம் தேதி ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட அந்த நாளின் நள்ளிரவிலேயே ‘தேசத்தைக் காப்பாற்ற சோனியா காந்தி அரசியலுக்கு வர வேண்டும்’ என்ற கருத்தைத் தொண்டர்கள் மத்தியில் விதைத்தவர். மிகவும் சோகம் தரக்கூடிய ஒரு துக்க நிகழ்வின் தாக்கத்தில் இருந்து நாட்டு மக்கள் விடுபடுவதற்கு முன்னதாகவே காங்கிரஸ் கட்சியைக் காப்பாற்ற அடுத்து எது சரியாக இருக்கும் என்ற முடிவுக்கு உடனடியாக வந்தவர். இப்போதும் காங்கிரஸைப் பலப்படுத்தவே அவர் முயல்கிறார். இந்தியா முழுவதும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீடுக்காகப் போராடிய வி.பி.சிங்கின் ஜனதா தளம் சிதறுண்டு கிடக்கிறது. பீகாரில் லாலு பிரசாத் யாதவ் ஒருபுறமும், நிதிஷ்குமார், சரத் யாதவ் ஆகியோர் மறுபுறமுமாகப் பிரிந்து கிடக்கிறார்கள். உத்தர பிரதேசத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களின் நாயகனாக முலாயம்சிங் யாதவ் இருந்து வருகிறார். ஒரு காலத்தில் உ.பி&யில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளித்த பிராமணர்கள் பி.ஜே.பி&யை ஆதரிக்கப் போய் விட்டார்கள். தலித் மக்கள் மாயாவதியிட மும், சிறுபான்மையினர் முலாயம்சிங் யாதவிடமும் நம்பிக்கை வைத்துள்ளார்கள். அதனால், இந்த மாநிலங்களில் இழந்த செல்வாக்கை மீட்க வேண்டும் என்ற கட்டாயம் காங்கிரஸ் கட்சிக்கு இருக்கிறது. அதற்குப் பின்னரே மத்தியில் காங்கிரஸ் கட்சியால் தனித்து ஆட்சி நடத் தும் நிலைக்குப் போகமுடியும். முலாயமுக்குப் பரவலாக இருக்கும் ‘பிற் படுத்தப்பட்ட மக்களின் நாயகன்’ என்ற பிம்பம் கலைய வேண்டும். உ.பி&யில் காங்கிரஸ் ஆட்சியைக் கொண்டுவருவதற்கு ராகுல் காந்திக்கு உதவும் விதத்தில்கூட அர்ஜுன் சிங் செய்திருக்கக் கூடும்.
அல்லது, பொருளாதாரச் சீர்திருத்தங்கள் விஷயத்தில் இடது சாரிகளுக்கும் மன்மோகன் சிங் அரசுக்கும் இடையில் எதிர்காலத்தில் முரண்பாடுகள் முற்றலாம். அப்படி ஒரு நிலை வந்தால், மாற்றுப் பிரதமராகத் தன்னை இடதுசாரிகளோ சோனியா காந்தியோ பரிந்துரைப்பதற்கு உதவி யாக ‘சமூக நீதி’ என்ற அஸ்திரத்தை அவர் கையில் எடுத்திருக்கலாம். ஒருவேளை, பிரதமராக வருவதற்குத் தனக்கு வாய்ப்பே கிடைக்கா விட்டாலும், அடுத்த குடியரசுத் தலைவர் பதவி மீது அவருக்குக் கண் இருக்கலாம். அரசியல்வாதிகள் மக்கள் நலனை மட்டுமே மனதில் கொண்டு செயல்படுவார்கள் என்று முழுமையாக நம்புவதற்கில்லை.
அர்ஜுன் சிங் என்ன நோக்கத்தில் இந்த இடஒதுக்கீடு விவகாரத்தைக் கையில் எடுத்திருந்தாலும்& கல்வித் துறையில் செயல்படுத்தப்போகும் இடஒதுக்கீடு, சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளைச் சமப்படுத்தும் ஒரு முயற்சி என்பதில் சந்தேகம் இல்லை. கல்வியில் சமத்துவத்துக்காகப் பாடுபடுவதாகக் கூறும் மத்திய அரசு, தரமான உயர்கல்வி நிறுவனங்களை அதிகரிப்பதற்கும் பாடுபட வேண்டும். அதேசமயம் அனைவருக்கும் கல்வி கிடைப்பதற்கும், அந்தக் கல்வி தரமானதாக இருப்பதற்கும் உத்தரவாதம் அளிக்க வேண்டும்.
கல்வியில் சமத்துவம், தரம் மற்றும் பரவலான படிக்கும் வசதி ஆகிய மூன்றிலும் சமச்சீரான வளர்ச்சி இருந்தால் மட்டுமே, அரசு எதிர்பார்க்கும் திசையில் சமூக வளர்ச்சி வேகமாக இருக்கும். மற்றபடி வெறும் சதவிகித கணக்கு மட்டுமே எல்லாவற்றையும் கொண்டுவந்து சேர்த்துவிடாது!
(நன்றி- ஜீனியர் விகடன்)
அய்யோ பாவம் (யானை தான்?)-------------------



நாட்டுக்கு ரொம்ப முக்கியம்?


தினகரனில் இன்று







இதையும் கொஞ்சம் பாருங்க!





பாத்தாச்சா? அடிங்க கமெண்டு

குமுதத்தில் கலைஞர்:

எதிரே வேணுகோபால ஸ்வாமி திருக்கோயிலிலிருந்து வேத மந்திரங்கள் ஒலிக்க, இன்னொருபுறம் ‘அண்ணன் கலைஞர் வாழ்க’, ‘டாக்டர் கலைஞர் வாழ்க’ உணர்ச்சி முழக்கம். அந்த மாலை வேளையில் கோபாலபுரத்தில் ஆனந்த களேபரம். ஐந்தாம் முறையாக முதலமைச்சர் பொறுப்பேற்றுக் கொண்ட கலைஞரைக் காண, வெளியூர்களிலிருந்து கட்சி நிர்வாகிகள் பளபள சால்வைகளுடனும், சந்தனமாலைகளுடனும் சாரி சாரியாக அணிவகுக்கிறார்கள். கே.கே.எஸ்.எஸ்.ஆர்., தண்டராம்பட்டு வேலு, தனுஷ்கோடி ஆதித்தன் என்று கழக, காங்கிரஸ் தூண்கள் நெரிசலுக்குள் புகுந்து வருவதைப் பார்த்துவிட்டு, அவர்களது மாவட்டத் தொண்டர்கள் கைதட்டுகிறார்கள்... கூக்குரலிடுகிறார்கள்... சிலர் பேச முடியாமல் கண்கலங்குகிறார்கள். இந்தப் பொன்னான நேரத்திற்கு எத்தனை காலம் காத்திருந்தார்கள்? எவ்வளவு சோதனைகளை எதிர்கொண்டார்கள்?
இவ்வளவு தூரம் கோபாலபுரத்திலுள்ள முதல்வரின் வீடு திமிலோகப்பட்டுக் கொண்டிருக்கும்போதும், எல்லோரையும் சில நிமிடங்கள் காத்திருக்கச் சொல்லிவிட்டு நம்மை அழைக்கிறார் முதல்வரின் உதவியாளர் ஸாரி... புதிய நேர்முகச் செயலாளர் சண்முகநாதன். ‘காலம் பொன் போன்றது. கடமை கண் போன்றது’ _ மாடிப்படிகளில் ஏறும்போதே அந்தப் பொன்மொழி கண்களில் பட, உள்ளே நடுநாயகமாக கலைஞர்! வழக்கமான பளீர் சிரிப்புடன் நம்மை வரவேற்கிறார். மனதளவில் அவர் இன்னமும் அதே வேகத்துடன் இருக்கிறார் என்பது, நம் கேள்விகளை முடிப்பதற்கு முன்பே அளித்த பதில்களில் புரிந்தது. நகைச்சுவை உணர்வு இந்த மனிதருக்கு இயல்பாகவே வருகிறது. அதுதான் யாரையும், எந்தச் சோதனையையும் எதிர்கொள்ளும் மனத்திடத்தைத் தருகிறதோ என்று


தோன்றியது.
குமுதம் : இந்த வெற்றி உங்களுக்குத் திருப்தியளிக்கிறதா? இன்னும் அதிக இடங்கள் எதிர்பார்த்தீர்களா?
கலைஞர் : பெரிய பணப்புயலை எதிர்த்து நடத்திய பயணத்தில், இவ்வளவு தூரம்தான் எங்களால் பயணிக்க முடிந்தது. இதுவே எங்களுக்கு மகத்தான வெற்றிதான். ஜனநாயகத்திற்கு வெற்றி கிடைத்தது என்று கருதுகிற நேரத்தில், சர்வாதிகாரத்திற்கு விடை கொடுக்கப்பட்டது என்பது, மிகுந்த ஆறுதலை அளிக்கிறது.
குமுதம் : இந்தத் தேர்தலில் எதிர்பாராத அதிர்ச்சி என்று எதைச் சொல்வீர்கள்?
கலைஞர் : சென்னை மற்றும் கோவை மாவட்ட முடிவுகள்.
குமுதம் : எம்.ஜி.ஆர் காலத்திலேயே தி.மு.க.வின் கோட்டையாக இருந்த சென்னை, உங்களை ஏமாற்றிவிட்டதாக நினைக்கிறீர்களா?
கலைஞர் : ஏமாற்றியதாக நினைக்கவில்லை. எங்கள் தொண்டர்கள் அல்லது முன்னோடி நிர்வாகிகள் சற்று மந்தமாகப் பணியாற்றியிருக்கிறார்கள் என்பது தெளிவான உண்மையாகும்.
குமுதம் : இதமான அதிர்ச்சி?
கலைஞர் : ஈரோடு மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்கள்.
குமுதம் : மந்திரிசபையில் இல்லாததால், பாட்டாளி மக்கள் கட்சி உள்ளூர அதிருப்தியில் இருப்பதாகச் சொல்லப்படுகிறதே?
கலைஞர் : யார் சொன்னது? பா.ம.க.வின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பதவி ஏற்பு விழாவுக்கு முதல்நாள் கூட என்னைச் சந்தித்துப் பேசினார். அப்போதும்கூட மந்திரிசபையில் இடம் பெறும் கருத்தை, அவர் வெளியிடவே இல்லை.
குமுதம் : முந்தைய ஜெயலலிதா அரசுக்கு எதிராக...
(இடைமறிக்கிறார்) சட்டத்தின் ஆட்சிதான் இனி நடக்கும். அது எல்லோரும் வரவேற்கக் கூடியதாக இருக்கும். திட்டமிட்டு யாரையும் பழிவாங்க நினைக்கமாட்டோம்.
குமுதம் : முதன் முறையாகத் தோழமைக் கட்சிகளின் ஆதரவில் ஆட்சி நடத்தப்போவதால், அவ்வப்போது நிர்ப்பந்தங்களைச் சமாளிக்க வேண்டி வருமே?
கலைஞர் : ஏன் உங்களுக்கு அவசரம்? நல்லதையே நினைப்போமே!
குமுதம் : உங்களுக்கு மிகவும் பிடித்தமான உழவர் சந்தை, சமத்துவபுரம் போன்ற திட்டங்கள் மறுபடியும் உயிர் பெறுமா?
கலைஞர் : சமத்துவபுரம் என்பது, ஒரு குறிக்கோளின் அடையாளம். உயர்ந்த நோக்கத்தில் உருவாக்கப்பட்டது. உழவர் சந்தை, விவசாயிகளுக்கும், வாங்கி நுகரும் மக்களுக்கும் அதாவது, இரு சாராருக்கும் _ நன்மை பயக்கும் திட்டம். இந்த இரு திட்டங்களும் ஜெயலலிதா அரசால் நிறுத்தப்பட்டு விட்டன. அவை மீண்டும் ஊக்கப்படுத்தப்பட்டு, தொடரும்.
குமுதம் : இலவச டி.வி. சீக்கிரம் மக்களுக்குக் கிடைக்குமா? சீனாவிலிருந்து தருவிக்கப் போவதாக ஏதேதோ செய்திகள் வருகின்றனவே?
கலைஞர் : ஆயத்தப் பணிகள் இப்போதே ஆரம்பமாகிவிட்டன. அதிகாரபூர்வமாக விரைவில் எத்தகைய பணிகள் என்பது அறிவிக்கப்படும். நாங்கள் எங்கிருந்து, எப்படி வாங்கப் போகிறோம் என்று அறிவிக்கவில்லையே... இனிதான் முடிவாகும். அதற்குள் அவசரமாக செய்திகள் வந்தால் நான் என்ன செய்ய முடியும்?
குமுதம் : மத்திய, மாநில அரசுகள் இரண்டிலுமே தி.மு.க. இருப்பதால், நிறைய சாதிக்க முடியும் அல்லவா?
கலைஞர் : மத்திய அரசிடம் ஏற்கெனவே நிறைய நன்மைகளைப் பெற்றுள்ளோம். இங்கேயும் எங்களது ஆட்சி அமைந்துள்ளதால், இந்த மாநிலத்திற்கான நிறைய பலன்களைப் பெற முடியும் என எதிர்பார்க்கலாம்.
குமுதம் : வெற்றி, தோல்விகளைத் தவிர, இந்தத் தேர்தல் யார் எதிரி, யார் நண்பன் என்று புரிந்து கொள்ளவும் உங்களுக்கு ஒரு வாய்ப்பாக அமைந்ததா?
கலைஞர் : ஆமாம்... அது உண்மைதான்!. யார் யார் என்று கேட்டுவிடாதீர்கள்! (வாய்விட்டுச் சிரிக்கிறார் கலைஞர்)
குமுதம் : காட்டு மிராண்டிக் கும்பலுக்கிடையே சட்டசபைக்கு வருவது நன்றாக இருக்காது என்கிறாரே ஜெயலலிதா?
கலைஞர் : எப்போதுமே அவர், தன்னைப் போலவே பிறரையும் நினைப்பவர்.
குமுதம் : அது என்ன கலைஞரின் கைமாறு? உங்கள் பதில்?
கலைஞர் : ஓட்டு வாங்கிட ஒரு ஒட்டு வேலை!
குமுதம் : உங்கள் குடும்பத்தினர் இந்த வெற்றியை எப்படிப் பார்க்கிறார்கள்?
கலைஞர் : இந்த வெற்றியை மகிழ்ச்சியாகப் பார்க்கிறார்கள் என்பதில், எனக்கு ஏற்படும் நிம்மதியைவிட, பல நேரங்களில் தோல்விகளையும், துன்பங்களையும் என் குடும்பத்தினர் தாங்கிக் கொண்டதுதான் எனக்கு மன ஆறுதலை அளிக்கிறது. எல்லாவற்றையும் விட, என் மீதும், கழகத்தின் மீதும் உள்ள ஆத்திரத்தில் என் குடும்பத்தினர் பற்றிப் பேசப்பட்ட, எழுதப்பட்ட இழி மொழிகளை அவர்கள் தாங்கிக் கொண்டதுதான் எனக்குள்ள பெரும் ஆறுதல். (சட்டென்று சலனமின்றி நம்மை நிமிர்ந்து பார்க்கிறார். அவரால் மட்டுமே முழுமையாக உணரக்கூடிய வலி அது. அடுத்த நிமிடமே குபீர் சிரிப்புடன் விடை தருகிறார். அதுதான் கலைஞர்).


அட!